Friday, January 14, 2011

சாருநிவேதிதா - நம் காலத்து ஜி.நாகராஜன் - தேகம் நாவல் விமர்சனம்.

இந்த நாவல் உங்களுக்கு நாற்றமடிக்கும் எனில் இந்த நாற்றத்திற்கு காரணமானவர்கள் நீங்கள என்று உணருங்கள். இந்த நாவலில் புழங்கும் வார்த்தைகள் உங்களுக்கு அருவருப்பாக அசூயையாக இருக்கும் எனில் ஆபாசமான அசிங்கமான காரியங்களை ரகசியமாக செய்து கொண்டே பொது வெளியில் புனிதர் வேஷம் போடும் பொய்யர் நீங்கள் என்பதை அறியுங்கள். இந்த நாவல் உங்களுக்கு சரோஜாதேவி கதைகளை நினைவூட்டுமெனில் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் நடத்தும் சரோஜாதேவி கதையின் நாயகர் நீங்கள் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

* * * * * * * * *

சாரு நிவேதிதாவின் தேகம் நாவலை மூன்று நாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று முறைக்கு மேல் வாசித்தாகிவிட்டது. வாசிக்க வாசிக்க பரவசம் அடங்கவில்லை. நீண்ட நாளாயிற்று இப்படி மனதின் அழுக்குகளையெல்லாம் துவைத்துக் காயப்போடும் ஒரு நாவலை வாசித்து.நீண்ட நாட்களாயிற்று உடலின் அனைத்து ரத்தநாளங்களுக்கும் புது ரத்தம் பாய்ச்சும் ஒரு எழுத்தை வாசித்து. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே வாசித்த போது அடைந்த இன்பம். இப்பொழுது சாருவின் தேகம் வாசிக்கும் போதே மீண்டும் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. குறிஞ்சி மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கும் என்பது சரிதான் போலிருக்கிறது.

* * * * * * *

நேற்று என் நண்பர் ஒருவரிடம் இந்த நாவலை சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். பல விஷயங்களை சொல்லி விட்டு குறிப்பாக இந்த நாவலில் ஆழ்வார் கதாபாத்திரமும் தர்மா கதாபாத்திரமும் குடித்து விட்டு வருவார்கள். ஆழ்வார் கடைசியாக ஒரு நூறு ரூபாயை தர்மாவிடம் கொடுத்து விட்டு '' Hard earned moneyடா; பார்த்து செலவு செய் '' என்பார். தர்மா '' ஜேப்படித் திருட்டிலும் குப்பி கொடுப்பதிலும் வருவது Easy moneyதானே என்று நினைத்துக் கொள்வான். இந்தக் காட்சியை கிட்டத்தட்ட சாரு எழுதியதைப் போலவே நான் அவரிடம் சொல்லி விட்டேன். பரவசம் அவரைத் தொற்றிக் கொண்டு விட்டது. உடனடியாக இந்த நாவலை நான் எடுத்துக் கொள்கிறேன், பணம் தந்து விடுகிறேன் என்றார். இல்லை நான் வாசிக்க வேண்டியிருக்கிறது என்று சொன்னேன். நீங்கள்தான் மூன்று முறை வாசித்து விட்டேன் என்று சொன்னீர்களே என்றார். நான் சொன்னேன். மூன்று முறை வாசித்திருக்கிறேன் என்றுதான் சொன்னேன். வாசித்து விட்டேன் என்று சொல்ல வில்லை என்றேன்.

காட்டின் நடுவே இருக்கும் ஒரு ஒற்றையடிப்பாதையில் மூன்று முறை நடந்து போய் விட்டு, நான் காட்டை அறிந்து கொண்டேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய அறியாமை. இனிமேல் தான் சாரு என்கிற வனத்தில் செழித்து வளர்ந்து கிடக்கும் ஒவ்வொரு மரத்தையும் மலரையும் கொடியையும் அதில் உறையும் கோடிக்கணக்கான உயிர்களையும் அருகே அமர்ந்து பார்க்க வேண்டும் என்றேன்.

* * * * * * * *

தமிழில் எழுத்தாளர்களாக இருப்பதில் பெரிய சோகம் என்னவென்றால், அவர்கள் எழுதுகிற புத்தகம் வருடத்திற்கு ஆயிரம் காப்பி கூட விற்பதில்லை என்று சாரு சொல்வார். என்னைக் கேட்டால் அது இரண்டாவது சோகம் தான் . முதல் சோகம் அந்த புத்தகத்தை நூறு பேர் கூட உடனடியாக வாசிப்பதில்லை என்பதுதான். ஒரு பத்து பேர் கூட அதற்கு சரியான மதிப்புரை எழுதுவதில்லை என்பதுதான். நாவலையும் எழுதி விட்டு, ஒரு நல்ல மதிப்புரைக்காக அந்த எழுத்தாளனே யாரிடமாவது புத்தகத்தைக் கொடுத்து தொங்க வேண்டியிருக்கிறது. தொண்ணாந்து தொண்ணாந்து வாங்கியே ஏதாவது ஒரு பத்திரிக்கையில் வெளியிட வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளனின் ஒரு வருட உழைப்பிற்கான ஒரு பாராட்டை ஒரு வருடம் முழுவதும் காத்திருந்தால் கூட பெற்று விட முடிவதில்லை. ஒரு சினிமா வெளியான தினத்திலேயே அதை பார்த்து விட்டு சுட சுட விமர்சனம் எழுதுகிற பிளாக்கர்கள் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நாவல் வெளியான சில தினங்களில் அதை வாசித்து விட்டு அதை ஆரோக்கியமாக விமர்சனம் செய்யும் ஒருவர் கூட பிளாக்கர்களில் இல்லை. யாராவது வாசித்து பிரமாதமாக எழுதுவார்கள். வாசித்து மகிழ்ச்சியடையலாம் என்று காத்திருந்து காத்திருந்து பார்த்து எனக்கு ஏமாற்றமே. நான் ஒரு எழுத்தாளன் இல்லை. சாருவின் எழுத்திற்கு ஒரு மதிப்புரை எழுதும் அளவிற்கு எனக்கு எழுத்துத் தகுதியும் இல்லை.வேறு யாரும் இந்த நாவலின் தகுதி உணர்ந்து எழுதாத காரணத்தால் நானே எழுதி விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.

சாரு சார் பொருத்தருள்க!

* * * * * * *

சாருவின் எழுத்தில் இருக்கிற பெரிய வசீகரம் அதன் வாசிப்பு கொடுக்கிற மகிழ்ச்சி. ஒவ்வொரு வாக்கியமும் மகிழ்ச்சி கொடுக்கும். நான் வசித்ததில், இர்விங் வேலஸ், சிட்னி ஷெல்டன்,ஃபிரெட்ரிக் ஃபோர்ஸித், கென் ஃபாலட் இவர்கள் எழுத்தில் அப்படி வாக்கியத்திற்கு வாக்கியம் மகிழ்ச்சி இருக்கும். தமிழில் அந்த மகிழ்ச்சி தரும் எழுத்து சுஜாதாவிடம் இருந்தது. அதனால் தான் சுஜாதா லாண்டரி கணக்கு எழுதினாலும் அது பத்திரிக்கையில் பிரசுரமாகும் என்ற அபிப்பிராயம் இருந்தது. இன்று தமிழில் அதை செய்ய முடிந்தவராக, செய்கிறவராக சாரு மட்டுமே இருக்கிறார்.

நாளாக நாளாக எழுத்தின் மகிமை கூடி இந்த புத்தகத்தின் வாக்கியங்களில் கட்டற்ற மகிழ்ச்சி குடி கொண்டிருக்கிறது.

ஆங்கில புத்தகங்களின் விமர்சனங்களில் unstoppable page turner, the book you can not put down என்றெல்லாம் எழுதுவார்கள்.அப்படியான வாசிப்பு வேகம் கொடுக்கும் வாக்கியங்கள்.

ஒவ்வொன்றும் எளிமையான வாக்கியங்கள். ஆனால் எளிதாக எழுதப்பட்ட வாக்கியங்கள் இல்லை. ஊனை உருக்கி உயிரை உருக்கி உள்ளொளி பெருக்கிக் கொடுத்த வாக்கியங்கள்.

பைபிலின் சங்கீதம் , ஐம்பதாண்டுகால உரைநடையை கற்றுத் தேர்ந்த முதிர்ச்சி, கவிதையின் அனைத்து சாத்தியங்களையும் உள்வாங்கிய மனம், முப்பதாண்டு காலமாக தொடர்ந்து எழுதி வந்ததில் எழுத்தடைந்திருக்கும் மேன்மை , இவை அனைத்தும் கை கூடிய எழுத்து என்று சொல்ல வேண்டும்.

அசோகமித்திரனும், ஆதவனும் முன்நின்று கைமாற்றிக் கொடுத்ததைப் போன்ற எழுத்தாற்றல்.

இதற்கு மேல் சாருவின் எழுத்தை என் எழுத்துத் திறனை கொண்டு விளக்கி விட முடியாது. மாக்ஸிம் கார்க்கி சொன்னதாக சொல்வார்கள். அவளின் அழகை என்னால் எழுத்தில் விவரிக்க முடியாது, ஒரு வயலின் கொடுங்கள் , வாசித்துக் காட்டுகிறேன் என்று. சாருவின் எழுத்தின் வசீகரத்தையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது, வயலின் கொடுத்தால், வாசித்துத் தான் சொல்ல முடியும்.

* * * * * * *

இந்த நாவலில் காமத்தின் அரசியலைப் பேசும் வார்த்தைகள் நிறைந்து கிடக்கின்றன. யோனி , ஆண் குறி என்று சாதாரணமாகத் துவங்கி..ஓக்கனும், புண்டைய நக்கு வரை..பல கனமான வர்த்தைகள் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. இதற்கு மேலாக பீ மூத்திரம், பீயின் வகைகள் பற்றிய வார்த்தகள் வேறு.

இந்த வார்த்தைகளை சாரு ஒரு வேலி போல பயன் படுத்துகிறார் என்றே நான் நினைக்கிறேன். இது எழுத்தாளர்கள் வைக்கும் பொறி.

தன் எழுத்தின் மூலம் ஒருவன் அடைய இருக்கின்ற உள்ளொளி அசடர்களுக்குப் போய் விடக்கூடாது என்று முடிவு செய்து பல எழுத்தாளர்கள் ஒரு பொறி வைப்பார்கள்.

விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரையில் ஜெயமோகன் 'முட்டாள்களுக்கு விஷ்ணுபுரத்தின் கோட்டைக் கதவுகள் மூடிக்கொள்ளும்' என்று எழுதியிருப்பது இதைத்தான்.

ஜெயமோகன் இந்து சானாதன தர்மத்தின் குழந்தை. விஷ்ணு புரத்தின் கோட்டைக்கதவுகள் அவரை அசடர்களிடமிருந்தும் முட்டாள்களிடமிருந்தும் காப்பாற்றும்.

சாரு நூறாண்டுகளுக்கும் மேலாக பீ சுமந்த குடும்பத்தின் பிள்ளை. அவர் வேறு எதை வைத்து பொறி செய்ய முடியும்? பீ மூத்திரம் யோனி புண்டைய நக்கு போன்ற வார்த்தைகளைக் கொண்டுதான் பொறி செய்ய முடியும்.

இந்த வார்த்தைகள் எப்படி பொறியாக செயல்பட்டு அசடர்களை வெளியேற்றும் என்று ஒருவர் நினைக்கலாம்.

புத்தக வெளியீட்டு தினத்தின் போதே மிஷ்கினை வெளியேற்றியதை நினைவு கொள்ளுங்கள்.

அந்த பொறியை கடந்து நாவலுக்குள் செல்ல முடிந்தவர்கள் ஒரு உள்ளொளியைப் பெற முடியும்.

* * * * * * * *

இந்த நாவலில் கதையென்று எதுவும் இல்லை.

அதாவது தமிழ் கூறும் நல்லுலகு கதை என்று அறிந்திருக்கிற ஒரு வஸ்து இதில் இல்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு வாழ்க்கைச் சித்திரைத்தை வரைந்த படி செல்லும். ஒவ்வொரு அத்தியாயமும் தனிப்பட்ட முறையில் ஒரு சிறுகதை போல இருக்கும். ஒரு பெண் காதலில் எழுதிய இமெயில்களாகவே ஒரு அத்தியாயம் முடிவடைகிறது. ஜென் கதைகள் மட்டுமே கொண்ட ஒரு அத்தியாயம் இருக்கிறது. மனச்சிதைவு கொண்ட ஒரு பெண்ணின் புலம்பல்களாகவே ஒரு அத்தியாயம் இருக்கிறது. ஒரு எளிமையான வாசகனுக்கு , தெளிவாக இல்லையே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பக்கங்கள் அவை. ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் அதற்குள் நாவல் எனும் பேரொளியை தரிசிப்பான் என்பது நிதர்சனம்.

* * * * * * * *

தேகம் நாவல் வெளியான தினத்திலிருந்து 'இது ஒரு சரோஜாதேவி புத்தகம்' என்ற கூக்குரல் இணைய வெளிகளில் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது.

சாருவின் எழுத்தை சரோஜாதேவி எழுத்து என்று இவர்கள் சொல்வதால் கூட நான் கோபம் அடையவில்லை. அதன் மூலம் இவர்கள் இவர்களைப் பற்றி கட்டமைத்துக்கொள்ள விரும்பும் புனிதர் வேடம் தான் எனக்கு அருவருப்பைத் தருகிறது.

இவர்கள் மிகவும் புனிதர்களாம். சரோஜாதேவி புத்தகம் என்றால் அஞ்சுவார்களாம். கூசி ஒதுங்குவார்களாம். அபச்சாரம் அபச்சாரம் என்று காதில் போட்டுக் கொள்வார்களாம். என்ன பொய்மை இது.

புனிதர்களே!

நீங்களே பகலில் காவி உடையுடன் வலம் வந்து இரவில் ரஞ்சிதாவை படுக்கையில் புஷிக்கும் நித்யானந்தாக்களாக இருக்கிறீர்கள்! நீங்களே காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு வரும் வீட்டுப் பெண்களை மயக்கி கருவரைக்குள் கொண்டு சென்று சவைக்கக் கொடுப்பவர்களாக இருக்கிறீர்கள். நீங்களே கல்வி கற்க வரும் ஏழைப் பெண்களை தடவிப் பார்க்கும் பாதிரிகளாக இருக்கிறீர்கள்! நீங்களே கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் தொழிற்சங்கத் தலைவரின் மனைவியை லெனின் மார்க்ஸ் படங்களுக்கு முன்னால் கிடத்தி புணர்கிறவர்களாக இருக்கிறீர்கள். நீங்களே முற்போக்கு இயக்கங்களுக்குள் வரும் பெண்களின் முலைகளை கசக்கி அவர்களின் கணவர்களை கொன்று கவர்ந்து செல்கிறவர்களாக இருக்கிறீர்கள்.பர்மா பஜாரில் முழு நீள நீலப் படங்களை முப்பத்தி ஐந்து ரூபாய்க்கு வாங்கி மனைவியுடன் தனியாக அமர்ந்து பார்க்கிறவர்களாக இருக்கிறீர்கள். நீங்களே மனைவியின் நிர்வாணத்தை படம் பிடித்து அதை இணையதளங்களில் ஏற்றுகிறவர்களாக இருக்கிறீர்கள்.உலகப் படங்களில் நிர்வாணக் கட்சிகள் தத்ரூபமாக காட்டப்படுவதால் உலக சினிமா பார்ப்பவர்களாக உருவாகியிருக்கிறீர்கள்.உங்கள் கள்ளக் காதல்களால் உண்டாகும் கருக்களைக் கலைக்க திருட்டு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. பிபிஓக்களில் உங்களின் புனித செயல்களால் கழிவரைகள் காண்டம்களால் அடைத்துக் கிடக்கின்றன. இவ்வளவு அசிங்கங்களையும் செய்கிறவர்களாக நீங்கள் இருந்து கொண்டு ஏதோ சரோஜாதேவி புத்தகத்தைக் கண்டு அஞ்சி நடுங்குவது போல் செய்கிற பாவனை யாருக்காக?

முட்டாள்களே! சாரு எழுதியது சரோஜாதேவிப் புத்தகம் என்றால் நீங்கள் என்ன ஓடியா ஒளிவீர்கள்? தலைக்கு ஐந்து புத்தகம் வாங்கியிருப்பீர்கள். தினசரி மைதுனம் செய்து கொள்வதற்காக கழிவரைக்கு அதைத்தான் எடுத்து செல்வீர்கள்! உங்கள் மனைவியின் அணைந்து போன காமத்தைத் தூண்ட அருகில் அமர்ந்து வாசித்துக் காட்டுவீர்கள். உங்கள் கள்ளக் காதலியை வலையில் வீழ்த்த அன்பளிப்பாக க் கொடுப்பீர்கள். நாவல் வெளியான தினத்திலேயே சில ஆயிரம் காப்பிகள் விற்றுத் தீர்ந்திருக்கும். ஏதோ புனிதர்கள் போல சரோஜாதேவி எழுத்து சரோஜாதேவி எழுத்து என்று கூக்குரலிடுகிறீர்கள்.

எனக்கு ஒரு ஏ ஜோக் நினைவிற்கு வருகிறது.

ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க திருமணமாகாத பெண் ஒரு இளைஞனிடம், 'இது வரை நான் ஆண் சுகத்தையே அறிந்த தில்லை. ஆண் வாசனையே எனக்குத் தெரியாது. ஆண்கள் யாராவது அருகில் வந்தால் காத தூரம் ஓடி விடுவேன் . இப்படியே என் வாழ் நாள் கழிகிறது' என்றிருக்கிறாள்.

அந்த இளைஞனுக்கு அந்தப் பெண் மேல் இரக்கம் உண்டாகிறது. அவன் மிகவும் கருணையுடன் அப்படியானால் உங்களுக்கு காமம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டிருக்கிறான்.

அதற்கு அந்தப் பெண் , 'வீட்டில் ஒரு கழுதை வளர்க்கிறேன். காமம் ஏற்பட்டால் அந்தக் கழுதையை வீட்டிற்குள் கூட்டி வந்து காலை விரித்துப் படுத்துக் கொள்வேன்' என்றாளாம்.

நீங்களெல்லாம் வீட்டில் கழுதை வளர்க்கிறவர்கள். மிகவும் புனிதர் வேடம் போடாதீர்கள்.

ஒரு எளிய கணக்கு .

சரோஜாதேவி புத்தகம் தமிழகமெங்கும் மாதம் 15,000 புத்தகங்கள் விற்கிறது. சாரு புத்தகம் வெளியான தினத்திலிருந்து இன்று வரை முந்நூறு புத்தகங்கள் கூட விற்கவில்லை. இந்த ஒரு தகவல் போதாதா சாரு எழுதுவது சரோஜாதேவி புத்தகம் அல்ல என்று உணர்வதற்கு.

சாரு எழுதுவது காமத்தைக் கிளரும் புத்தகம் அல்ல.காமத்தின் அரசியலைப் பேசும் புத்தகம்.

சாருவின் சகல எழுத்தையும் தொடர்ந்து வாசிக்கும் வாசகன் என்ற அடிப்படையில் நான் உங்களுக்கு மேலும் ஒன்றை பெருமிதமாக சொல்லிக்கொள்கிறேன்.

கடவுள் சாருவுக்கு அளித்திருக்கும் எழுத்து வல்லமைக்கு, அல்லது சாரு அவருடைய கடும் உழைப்பால் பெற்றிருக்கும் எழுத்து வல்லமைக்கு, அவர் காமத்தைக் கிளரும் ஒரு புத்தகத்தை எழுதினால், perfume படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு நாடே கலவியில் முயங்கிக் கிடப்பதைப் போல நீங்கள் எல்லோரும் விடுபட முடியாத காமத்தில் கட்டுண்டு கிடப்பீர்கள். எச்சரிக்கை!

* * * * * * * *

ஜெயகாந்தனின் ' ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' புத்தகத்தில் ஒரு சம்பவம் வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம். தலைவர்கள் எல்லோரும் தலைமறைவாய் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களில் ஒருவரான ஜெயகாந்தனும் தலைமறைவு வாழ்க்கையில் இருக்கிறார். அப்பொழுது கட்சியின் ஒரு பெரும் தலைவைர் ஜெயகாந்தனை சந்திக்கிறார். அவர்கள் இருவரும் இரண்டாம் ஆட்டம் ஒரு சினிமா பார்க்கிறார்கள்.அதன் பின் வேறு எங்கும் போவதற்கு இடமில்லாமல் ஒரு இருட்டான சந்தில் ஒரு கடையின் வாசலில் படுத்துக் கொள்கிறார்கள். நடு ராத்திரியில் அந்த த் தலைவர் ஜெயகாந்தனின் தொடையை வருடி காமத்திற்கு முயற்ச்சித்திருக்கிறார். ஜெயகாந்தன் கோபம் கொண்டு அவரை ஓங்கி அறைந்து விடுகிறார்.

விஷயம் இதுதான் ஜெயகாந்தன் தன்னை ஹோமோ செக்ஸிற்காக அனுகிய ஒரு தலைவரை ஓங்கி அறைந்து விடுகிறார்.

இந்த சம்பவம் நடந்த போது ஜெயகாந்தனுக்கு பதினெட்டு வயதோ பத்தொன்பது வயதோ.அந்த வயதில் ஜெயகாந்தன் அப்படி நடந்து கொண்டதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த சம்பவத்தை எழுதும் போது ஜெயகாந்தனுக்கு நாற்பது வயது. அப்பொழுது ஜெயகாந்தன் சொல்கிறார், 'நான் இதை கம்யூனிஸ்ட் கட்சியை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் சொல்லவில்லை. இழிவானவர்கள் கம்பயூனிஸ்ட் கட்சியின் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் நான் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை தெளிவு படுத்தவே இதை இப்பொழுது எழுதுகிறேன்' என்கிறார்.

அவருடைய பார்வையில் காமத்திற்காக ஒரு ஆணை அணுகுகிற இன்னொரு ஆண் இழிவானவன்.

ஜெயகாந்தன் இது போன்ற தருணங்களில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் நடந்து கொள்ள வேண்டிய நாகரிகமான முறை பற்றி பல கதைகள் எழுதியவர். ஒரு மகன், தன் தாயை தவறுதலாகக் காமக் கண் கொண்டு பார்த்து விட்டால் கூட அவனை மன்னிக்கத்தான் வேண்டும் என்றெல்லாம் கூட மேதமையோடு எழுதியவர். அவரே காமத்திற்காக இன்னொரு ஆணை அணுகுகிற ஒரு ஆண் இழிவானவன் என்ற புரிதலோடு இருந்திருக்கிறார்.

நம் காலத்தின் மாபெரும் சிந்தனையாளர் ஜெயகாந்தன். முற்போக்கில், நாகரிகத்தில் அவரே கடக்க முடியாத தூரங்கள் அவர் காலத்தில் இருந்திருக்கின்றன.

மாமேதை ஜெயகாந்தனே கடக்க முடியாத தூரங்கள் இருக்குமென்றால் மக்கு மார்க்சிஸ்ட் மாதவராஜ் கடக்க முடியாத தூரத்தைப் பற்றி நாம் எப்படி வருத்தம் கொள்ள முடியும்.

மாமேதையின் வீட்டிற்கு மருமகனாகப் போனால் ஞானமா கை மாறும்?

மாதவராஜ் அவருடைய இணையதளத்தில் 'சாரு நிவேதிதாவின் எழுத்தை வாசிப்பதற்கு பதில் நான் பாமரனாகவே இருந்து விட விரும்புகிறேன்' என்று சூளுரைக்கிறார்.

மாதவராஜ், நீங்கள் பாமரராக இருங்கள், அதனால் எந்தக் கேடும் இல்லை. பாமரர்கள் நல்லவர்களே. அவர்களால் சமூகத்திற்கு நல்லது மட்டமே நடக்கிறது. ரெண்டுங்கட்டான் அறிவு ஜீவிகளால் தான் எல்லா கேடும் நடக்கிறது.

நண்பர்களே ! மது மட்டும் அல்ல. மாதுவும் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு தான்.

* * * * * * * * * * *

ஒரு முந்நாள் கதாநாயகி என் திரையுலக நண்பனுக்குத் தோழி. அதனால் எங்கெளுக்கெல்லாம் தோழி. அவர் சிறு வயதிலேயே தாயை பறிகொடுத்தவர். அவருடைய தந்தைதான் அவரை கதாநாயகியாக உருவாக்கியிருக்கிறார். கதாநாயகியாக இருப்பதனால் பல செல்வந்தர்களிடமும் போக வேண்டியதிருக்குமல்லவா? அப்பொழுதெல்லாம் அவருடைய தந்தைதான் அவரை அழைத்துச் செல்பவராகவும் இருந்திருக்கிறார். அப்பொழுது அந்த தந்தை மகளுக்கு ஒரு அறிவுரை சொல்லியிருக்கிறார். ' நம் ஊர் ஆண்களுக்கு உறுப்பில் வாய் வைக்கிற பெண்ணையே மிகவும் பிடிக்கும். அதனால் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே அங்கே வாய் வைத்து விடு. அதில் நமக்கு என்ன லாபம் என்றால், அவர்களுக்கு சீக்கிரம் வெளியேறி விடும். அதன் பின் மீண்டும் அது தயாராக நேரம் பிடிக்கும். அதற்குள் நம்முடைய ஒரு மணி நேரம் முடிந்து விடும். நாம் பணத்தை வாங்கிக்கொண்டு வந்து விடலாம். உன் உடலும் அதிகம் கெடாமல் இருக்கும்' என்று.

அன்புள்ள மாதவராஜ்,

தந்தை மகளுக்கு சொல்லிய அறிவுரையாக பல விஷயங்களை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இப்படி ஒரு அறிவுரையை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

உலகம் பல விதமாக இருக்கிறது மாதவராஜ். எல்லாவற்றையும் உங்களுடைய சௌகர்யமான வாழ்க்கையிலிருந்தே பார்க்க க்கூடாது.

உங்களுடைய சௌகர்யமான வாழ்க்கை என்பது இந்த சமூகம் உங்களுக்குக் கொடுத்திருக்கும் லஞ்சம்.

நாம், நம் வீட்டு பதினான்கு வயது பையனுக்கு நம் உழைப்பில் சாப்பாடு போடுவோம். மாமல்லபுரத்தில் பதினான்கு வயது பையன் அவனுடைய ஒரு வேளை சாப்பாட்டிற்காக வெள்ளைக்காரர்களிடம் குண்டி காட்ட வேண்டியிருக்கிறது.

கயாஸ் தியரி பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்தானே. அந்த தியரியில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு என்று எந்த வார்த்தையும் இல்லை. உங்களுக்குப் பிடித்த பட்டாம் பூச்சியே இருக்கிறது. அதனால் நீங்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகத்தின் ஒரு மூலையில் ஏற்படும் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு இன்னொரு மூலையில் பூகம்பத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கிறது என்பதே அந்த தியரி.

நம்முடைய சௌகர்யமான வாழ்க்கையின் விளைவு தான் , மாமல்லபுரத்தில் ஒரு பதினான்கு வயது சிறுவன் ஒரு நேர சாப்பாட்டிற்காக குண்டி காட்ட நேர்வது,

மாமல்லபுரத்தில் ஒரு பதினான்கு வயது சிறுவன் குண்டி காட்டுவதால்தான் நாம் சௌகர்யமாக வாழ்கிறோம்.

சாரு நிவேதிதா குண்டி காட்டும் சிறுவர்களைப் பற்றி எழுதுவதை குண்டி அடித்தல் பற்றி எழுதுவதாகத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

* * * * * * * * * * *

நண்பர்களே! இங்கிருக்கிற எழுத்தாளர்கள் எல்லாம் அமுல் பேபி எழுத்தாளர்கள். கண்ணதாசன் ஒரு கட்டுரையில் தமிழ் நாட்டு மக்களைப் பற்றிச் சொல்வார்.இவர்களுக்கு போர் தெரியாது, புயல் தெரியாது பாவம் குழந்தைகளைப் போல் வளர்க்கப் பட்டு விட்டார்கள் என்று. அது தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். இவர்கள் ஃபேரக்ஸ் குழந்தைகளாக வளர்க்கப் பட்டு விட்டவர்கள்.


ச. தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில் சிறு வயது சோகமாக ஒன்றைப் பதிவு செய்கிறார். அவருடைய அப்பாவுக்கு அரசு வேலை. அதனால் அவர் எப்போதும் ஏதாவது ஒரு ஊரில் இருப்பார் அவர் அம்மாவும் உடன் சென்று விடுவார். தமிழ்செல்வனும் அவருடைய தம்பியும் இரவெல்லாம் அப்பா அம்மாவை நினைத்த படியே பாட்டி வீட்டில் இருப்பார்கள். இவ்வளவு தான் அவர்களுடைய சோகம். ஒரு மிடில் கிளாஸ் சோகம்.

உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் இலக்கிய அமைப்பின் செயலாளருடைய சோகமே இவ்வளவு தான் நண்பர்களே.

அது மட்டுமல்லாமல் இவர்கள் எல்லோரும் மேல் ஜாதி இந்துக்கள். ஒன்று பிராமணர்கள் அல்லது மேல் ஜாதி இந்துக்கள்.

இங்கு ஏற்கனவே மேல் ஜாதி இந்துக்களால் கட்டமைக்கப் பட்டிருக்கிற பத்திரிக்கைகளில் சமூகத்தில் இவர்கள் கதைகள் எழுதும் போது அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படுவதில்லை. அவர்கள் மலர் தூவியே வரவேற்கப் படுகிறார்கள்.இவர்களின் இயல்பான சிந்தனையே இவர்களுக்கு எல்லா பெயரையும் பெற்றுத் தந்து விடுகிறது.

சாரு நிவேதிதா மேற்கண்ட இரண்டும் இல்லை. சாரு நிவேதிதா சிறுவனாக இருக்கும் போது அவரும் அவருடைய நைநாவும் நாகூரின் ஒரு கிராமத்தில் எடுப்பு கக்கூஸில் மலம் அள்ளியவர்கள். அவர் காட்டு நாயக்கன் என்று இன்று ஓரளவு கௌரவமாகத் தெரிகிற ஆனால் ஒட்டான்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்ட இழிவுபடுத்தப் பட்ட ஜாதியைச் சார்ந்தவர். அவர் வேறு ஒன்றாகத்தான் பேச முடியும்.அது மட்டுமல்லாமல் அவர் உலகை உய்விக்கும் பல சிந்தனைப் போக்குகளில் ஒன்றான, காமத்தின் அரசியலைப் பேசுதல் என்ற சிந்தனை முறையை கைக் கொண்டிருக்கிறார். அது மேல் ஜாதி இந்து எழுத்தாளர்கள் பேச அஞ்சும் சிந்தனை.

வெறுமனே தீக்குழியில் இறங்குவதே கஷ்டம் எனும் போது உடலெல்லாம் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குழியில் இறங்கும் வீரனாக சாரு இறங்குகிறார். வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் பாருங்கள். அது தான் சாருவுக்கு நடக்கிறது.

மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு வகை ஒழுக்கம் பேசுகிறார்கள் என்றால் சாரு வேறு ஒரு வகை ஒழுக்கம் பேசுகிறார்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஒழுக்கங்களை ஒழுக்கக் கேடு என்று புரிந்து கொள்வது ஒரு வகை தீயொழுக்கம் என்று ஜெயகாந்தன் சொல்கிறார்.

எனவே மாறு பட்ட ஒழுக்கங்களை தீயொழுக்கம் என்று பேசாதீர்கள்.
Some other Moral ஐ Immoral என்று கருதாதீர்கள்!


* * * * * * * * * * * * *

தேகம் நாவலின் உத்தி என்னை மிகவும் கவர்ந்த அம்சங்களில் ஒன்று. இது தர்மா என்கிற கதாபாத்திரத்தின் கதையைச் சொல்வது போல இருக்கும். திடீரென சுயசரிதை வடிவம் கொள்ளும். நாம் எல்லோரும் சாருவின் சுயசரிதையைத்தான் வாசிக்கிறோம் என்ற எண்ணத்திற்கு வருவோம். மருபடியும் அது தர்மாவின் கதையை பேச ஆரம்பிக்கும்.திடீரென சாரு கதையில் தோன்றி பதிப்பகத்தாருக்கும் அவருக்கம் நடந்த உரையாடலைச் சொல்லுவார். மறுபடியும் அதை கதையாக மாறும். சாரு போல எழுத்தின் நுட்பங்கள் மிகவும் உள்வாங்கிய ஒருவரே இந்த இலக்கிய விளையாட்டை நடத்த முடியும். சாருவின் நிஜ வாழ்க்கையில் புலங்கும் மனிதர்கள் இந்த நாவலிலும் வருகிறார்கள். அவர்களை நாம் எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். உதாரணமாக தினமலர் ரமேஷ். அவர் வைணவர் என்று நினைக்கிறேன் .அவர் ஆழ்வார் என்ற கதாபாத்திரமாக வருகிறார். கிருஷ்ணன் மனுஷ்ய புத்திரனாக இருக்கலாம். அவர் எப்பொழுதும் பெண் கவிஞர்கள் எனும் கோபியர்கள் புடை சூழ இருப்பதால் கிருஷ்ணன் எனும் பெயர். இந்த நிஜ கதாபாத்திரங்கள் நாவலை மேலும் சுவாரஸ்யம் கொண்டதாக மாற்றுகிறார்கள்.

* * * * *

அன்புள்ள சாரு சார்,

ஆத்மா அழிவதில்லை என்று நீங்கள் நாவலில் எழுதியிருக்கிறீர்கள். நான் நம்புகிறேன்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், நாடார் பெண்கள், அது வரை மறைக்காமலிருந்த மார்பகங்களை மறைக்க தோற்சீலை போட்டுக் கொண்ட போது அவர்களின் மார்பகங்களை அறுத்த நம்பூதிரிகளின் ஆத்மா அழியவில்லை. அவைகள் மறு உடல்களைப் பெற்று இன்று மாதவராஜ்களாக மார்க்சிஸ்ட் கட்சியிலும் மருதையன்களாக மகஇக கட்சியிலும் உறுப்பினர் அட்டை பெற்றிருக்கின்றன.

நீங்கள் உடலெங்கிலும் மார்பகங்களை அறுக்கக் கொடுத்தவராக நிற்கிறீர்கள்.

காலம் உங்கள் காயங்களை ஆற்றும்.

நாங்கள் என்றும் உங்களுடன் நிற்கிறோம்.

தேகம் நாவலுக்கு நன்றி!



இன்னும் வளரும்...

Wednesday, January 5, 2011

கமல், ஞானி முதலான ஈழ துரோகிகள்!

பிராமனரெல்லாம் ஈழ துரோகிகளாக இருக்கிறார்களா? அல்லது ஈழ துரோகிகள் எல்லோரும் பிராமணர்களாக இருக்கிறார்களா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் சோ ராமசாமியில் துவங்கி என்.ராம்,ஞானி என ஈழ துவேசம் கொண்டவர்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள். இப்பொழுது புது வரவு பத்மஸ்ரீ கமல்ஹாசன்.

நேற்றுத்தான் மன்மதன் அம்பு பார்த்தேன். இன்று உலகெங்கிலும் அகதிகளாய் நிம்மதியின்றி அலையும் ஈழத்தமிழனை இப்படி ஒரு இழிவான கதாபாத்திரமாக உலகில் யாரும் படைக்க முடியாது.

ஈழப்பிரச்சினையில் எதிர் எதிர் கருத்து கொண்டவர்களை பார்த்திருக்கிறோம். அந்த கருத்துக்களை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியும். எல் டி டி இ பிரச்சினையிலும் , பிரபாகரன் பிரச்சினையிலும் எதிர் எதிர் கருத்து கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம், அதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அகதிகள் விஷயத்தில் இப்படி எதிரான கருத்து கொண்ட ஒரு நபரை இது நாள் வரை நான் கண்டதில்லை.

கடந்த முப்பதாண்டுகளில் ஈழத்தமிழர்கள் அடைந்த கொடுமைக்கு நிகரான கொடுமையை உலகில் எந்த உயிரினமும் அடைந்திருக்க முடியாது. ஈழத்தமிழர்களின் வாழ்வின் மீது , நிம்மதியின் மீது, உயிரின் மீது உலகம் ஆடிய சூதாட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இப்பொழுதான் அவர்களின் மீது ஒரு கரிசன பார்வை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் மேல் மண் அள்ளிப் போடுவதற்காகவோ என்னவோ கமல்ஹாசன் இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறார்.

கமல்ஹாசன் முட்டாளல்ல. ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கிற அரசியல் சகலமும் அறிந்தவரே.அதன் பின்னும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் என்றால் இவர்கள் ரத்தமே தமிழர்களுக்கு எதிராகத்தான் இவர்களை யோசிக்க வைக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்தில் சீனு ராமசாமி என்ற நண்பர் எழுதிய ஒரு கவிதையை வாசித்தேன்

கடும்
வெயிலில்
புறநகர்க் காவல்நிலையத்திற்கு முன்பு
கொட்டப்பட்டிருந்த
மண்ணை அள்ளிக் கொண்டிருந்தான்

குற்றவாளியைப் போல
அறவே இல்லை அவனது
தோற்றம்

அள்ளிய மண்ணை
காவல் நிலையத்திற்கு பின்புறம்
கொட்டச் சொல்லி
உத்தரவு

கையூட்டு தர இயலாத
காரணத்தாலும்
வசிப்பிடச் சான்றிதழ்
பெறுவதற்காகவும் அந்த யாழ்பாணத்
தமிழனுக்கு இவ்வேலை
ஏவப்பட்டிருக்கிறது.

யாழ்பாணமோ
இந்தியாவோ
எங்கோ
காவல்நிலைய வாசலில் கொட்டப்பட்டிருக்கும்
மண்ணை அள்ளிக் கொண்டிருக்கின்றன
நாடற்ற கைகள்.

இது தான் அகதி குறித்து உலகம் அறிய வேண்டிய செய்தி. இது தான் ஒரு அகதிக்காக கலைஞன் செய்ய வேண்டிய காரியம்.

சீனு ராமசாமி சமீபத்தில் வெளியாகி இருக்கிற தென்மேற்கு பருவக்காற்று படத்தின் இயக்குனர்.

சீனு ராமசாமியும் தமிழ் திரையுலகில் தான் இருக்கிறார். கமல்ஹாசனும் தமிழ் திரையுலகில்தான் இருக்கிறார்.

எனக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வருகிற ஒரு வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

அமுதமும் விஷமும் ஒரே பூமியில் தான் விளைகிறது.
அழகும் நஞ்சும் அதுபோல் தான்
கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே மண்ணில்தான்

சீனு ராமசாமியும் கமல்ஹாசனும் ஒரே மண்ணில் தான்