Monday, October 19, 2009

தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு!

ஆதவன் தீட்சன்யா என்னும் ஆள்காட்டி என்று நான் எழுதியிருந்த எனது முந்தைய கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்த து. பலர் பாராட்டி இருந்தார்கள். சிலர் விமர்சித்திருந்தார்கள். சில அனானிகள் ‘தூ , இதெல்லாம் ஒரு பிழைப்பா? மானங்கெட்ட நாயே!’ என்று திட்டியிருந்தார்கள்.
பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யவில்லை. தோழர் தமிழ்செல்வன் அவர்கள் எழுதிய ஒரு நான்கு வரி விமர்சனம் மட்டும் என்னை என் கொள்கை நிலைப்பாட்டை மறுவிசாரனைக்கு உட்படுத்திக் கொள்ளத் தூண்டியது.

அந்த நான்கு வரி விமர்சனம் இதுதான்.

ஆதவன் தீட்சண்யா பற்றிய இக்கட்டுரை அவதூறுகளின் உச்சகட்டமாக உள்ளது தோழரே.ஒரு வரிகூட சரியில்லை.தப்பான தகவல்களுடன் தப்பான பார்வையுடன் வந்துள்ள பதிவு இது. மார்க்சிஸ்ட் கட்சியை நாலு வார்த்தை திட்டினால்தான் ஒரு அறிவாளியாக ஏற்றுக்கொள்வார்கள் ஈழ ஆதரவாளராக ஏற்றுக்கொள்வார்கள்.அதுக்காக எழுதிய கட்டுரை இது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. இப்போ இதெல்லாம் பேச வேண்டியதில்லை. பருவமழை துவங்கும் முன்னால் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பப் படவேண்டும் என்கிற ஒரே கோரிக்கையை வைத்து தமிழகத்தில் எல்லாக் கட்சியினரும் பொதுமக்களும் வலுவான இயக்கம் நடத்த வேண்டும்.உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சிபிஎம் மட்டும்தான் இன்று இக்கோரிக்கையை வைத்துப் போராட்டங்களைத் துவக்கியுள்ளது.

என்னை மறுவிசாரனைக்கு உட்படுத்திக் கொண்ட நிலையில் இந்த பதிலை எழுதுகிறேன்.

நான் இடதுசாரி எதிர்ப்பு நமைச்சலில் மார்க்சிஸ்ட்களை விமர்சிக்கவில்லை.

இந்திய அரசியலில் இன்றும் எளிமையோடும் நேர்மையோடும் அடித்தட்டு மக்களின் மீதான உண்மையான பரிவோடும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை மிகவும் நேர்மையுடன் என்னால் உணர முடியும்.

இந்தியா பற்றிய மிகச்சிறந்த ஒரு கனவை சுமந்து கொண்டிருக்கிற, அதன் காரணமாக பெரிய தியாகங்களை செய்திருக்கிற மற்றும் செய்யத் தயாராக இருக்கிற சில லட்சம் தோழர்களை தன்னுடைய கட்சியில் வைத்திருக்கிற கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.

இந்திய அரசியல் அரங்கில் திடீரென ஒரு ராட்சதப் பாம்பைப் போல உள்ளே நுழைந்து மதவாதம் என்னும் விஷத்தில் இந்தியாவை மூழ்கடிக்க பிஜேபி முயன்ற போது அதனுடன் சரி நிகர் சமர் புரிந்து, இன்று அந்த பிஜேபி என்கிற நச்சுப் பாம்பை அடித்துத் துவைத்து ஒரு ஓரத்தில் அமர வைத்த கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.

இன்று பல காரணங்களால் இடதுசாரிகள் சற்றே சரிவில் இருந்தாலும் இடதுசாரிகள் இல்லாமல் இந்தியா சுபிட்சம் பெற முடியாது.

இவைகளையெல்லாம் நான் எப்படி நேர்மையாக உணர்கிறேனே அதே நேர்மையோடு தான் இந்த விஷயத்தையும் உணர்கிறேன் ‘ஈழ போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவறான செயல்பாடு கொண்டிருக்கிறது’ என்பதையும்.

இந்தியாவில் இருக்கிற அரசியல் இயக்கங்களில் மூன்று இயக்கங்கள் ஈழப்போராட்டத்தின் மீது எதிர்ப்பு கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மையின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருக்கிறது. முஸ்லிம் இயக்கங்கள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் தலைவரை ஈழப்போராளிகள் அழித்தொழிப்பு செய்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது . ஈழ நிலப்பரப்பில் இருந்த இஸ்லாமியர்களை ஈழப்போராளிகள் அவர்களுடைய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றியிருக்கிறார்கள்.

புரியாத புதிராகவும் மர்மமாகவும் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈழப்போராட்டத்தின் மீது கொண்டிருக்கிற எதிர்ப்புணர்வும் வெறுப்புணர்வும் தான்.

ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது எழுத்தாளர் ரவிக்குமார் இந்த விஷயத்தைச் சொன்னார்.

ஒரு நாள் டி.கே ரங்கராஜனை எம் எல் ஏ ஹாஸ்டல் வாசலில் ரவிக்குமார் பார்த்திருக்கிறார். டி.கே.ரங்கராஜன் அவர் கக்கத்தில் இருந்த ஷோபா சக்தியின் ஈழம் என்னும் புத்தகத்தை காட்டி ‘ ரவிக்குமார் இந்தப் புத்தகத்தை படித்திருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

அது அந்தப் புத்தகம் வெளியான மறுதினம்.

ஷோபா சக்தியின் ஈழம் என்னும் புத்தகத்தின் 2000 காபிகளையும் வாங்கித் தீர்த்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான்.

இன்றும் அந்தப் புத்தகங்கள் அவர்கள் வீட்டு அலமாரியை அலங்கரித்த படியே இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல தோழர்கள் ஈழ போராட்டத்தின் வரலாற்றையே ஷோபா சக்தியின் புத்தகத்தின் மூலமாகத்தான் அறிகிறார்கள்.

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், மா சே துங்கின் நீண்ட பயணம் போன்ற புத்தங்களை தேடித் தேடிப் படித்த மார்க்சிஸ்ட்கள் இன்று ஈழப்போராட்டத்திற்கு எதிரான புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்கிறார்கள்.

ஈழப்போராட்டம் என்பது அடிப்படையில் அநீதிக்கு எதிரான குரல்.

ஒரு போராட்டத்திற்கு எதிரான புத்தகத்தை வாங்கிப் பிடித்து படிக்க வேண்டும் என்ற நமைச்சலை உங்களுக்கெல்லாம் உருவாக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எந்தக் காரணி?

மாதவராஜின் தீராத பக்கங்களில் பிரபாகரனின் மறைவு மற்றும் ராஜீவ் காந்தியின் மரணம் என்ற கட்டுரையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த கீழ்கண்ட வாசகங்கைப் பார்த்தேன்.

சரியோ, தவறோ.... வரலாற்றில் இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பிரபாகரன் ஒரு அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்கிறார் என்பது உண்மை. தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். அதுவே அவரது மறைவு (மரணமல்ல!) குறித்து கவலை கொள்ளச் செய்கிறது. ஒரு மனிதனுக்குள் உருவாகியிருக்கும் கருத்துக்களை ஒரு நிகழ்வு உடைத்து விடும் வலிமை கொண்டதாயிருக்கிறது. இதை நான் உணர்ந்த இடம் பிரபாகரனின் மறைவையொட்டிய (மரணமல்ல!) காட்சிகள்.

ஒரு நேர்மையான கலைஞனின் நேர்மையான தடுமாற்றம் இது. நேற்று வரையில் பிரபாகரன் குறித்து தூற்றிக்கொண்டிருந்தவர் மாதவராஜ். இன்று அவருடைய மனம் மாறியிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பிரபாகரனின் மரணச்செய்தி வர வேண்டி யிருக்கிறது.

முன்பு ஏன் அப்படி செய்தார் என்று கேட்டால் எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது என்று பதில் சொல்கிறார்.

யாருக்கு யார் மேல் விமர்சனம் இல்லை.

விமர்சனம் இருக்கிறது என்பதற்காக விமர்சனம் செய்தே ஒரு இயக்கத்தை கொலை செய்ய வேண்டுமா?

கருணாநிதி மேல் உங்களுக்கு விமர்சனம் இருக்கிறது. அவரோடு சேர்ந்து செயல்படுகிறீர்கள். ஜெயலலிதா மேல் விமர்சனம் இருக்கிறது அவரோடு சேர்ந்து செயல்படுவீர்கள். காங்கிரஸ் மீது விமர்சனம் இருக்கிறது. ஆனாலும் காங்கிரசோடு சேர்ந்து செயல்படுவீர்கள். ஆனால் ஈழப்போராட்டத்தை மட்டும் விமர்சனம் மட்டும் செய்து கொலை செய்வீர்களா?

குளிக்கும் தொட்டியில் குழந்தையை குளிப்பாட்டி குழந்தையையும் சேர்த்து சாக்கடையில் கொட்டி விடுகிற காரியத்தை வரலாற்றில் எத்தனை முறை செய்வீர்கள்?

உங்களுடைய தமிழ் வீதியில் ‘ துப்பாக்கிகள் அடங்கியிருக்கும் இப்பொழுதேனும் ‘ என்னும் கட்டுரையை வாசிக்கிறேன்.
ஈழ மக்கள் மீது அக்கறையும் வருத்தமும் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைதான். ஆனாலும் இழவு வீட்டிற்கு போன ஒரு பெண் மணி வாசலில் பந்தலில் தொங்கிய பூசனிக்காய் பற்றி பாடியதைப் போல இந்தக் கட்டுரையிலும் ஈழப் போராட்டத்திற்கு எதிரான விஷ வார்த்தைகளை நீங்கள் பயன் படுத்த த் தவற வில்லை.

மாறியுள்ள சர்வதேச நிலைமைகளை கணக்கில் கொண்டு போர்த்தந்திரங்களை வகுக்கத்தெரியாதவர்களா 33 ஆண்டுகாலம் ஆயுதம் ஏந்தி நின்றார்கள் என்கிற வியப்பும் அதன் காரணமாகவும் நம் மக்கள் கூடுதல் அழிவைச் சந்திக்க நேரிட்டதே என்கிற பெருமூச்சும் ஒருசேர ஏற்படுகிறது.

என்று ஒரு வாசகம் எழுதிச் செல்கிறீர்கள்.

விடுதலைப் புலிகள் முட்டாள்கள்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொல்ல ஆசைப்படுகிற வாக்கியம் அது. நீங்கள் அப்படி எழுதியது குறித்து நான் வருத்தப்பட வில்லை.

விடுதலைப் புலிகளின் வீரமும் தீரமும் தியாகமும் அவர்களின் புத்திசாலித்தனமும் உலகம் அறிந்தது. அதற்கு ஆயிரம் உதாரணங்கள் இருக்கின்றன.

எனக்கு உங்களுடைய அந்த வாசகத்தைப் படித்த போது சிரிப்புதான் வந்தது.

ஏதோ நீங்கள் எல்லாம் மாறியுள்ள சர்வதேச நிலைமைகளைக் கணக்கில் கொண்டுதான் ஆயுதப் போராட்டத்தைக் கை விட்டு விட்டது போலவும்..

ஏதோ நீங்கள் முன் கூட்டியே மாறி வரும் சர்வதேச நிலைமைகளை கணக்கில் எடுத்து மற்ற போராட்ட இயக்கங்களை எச்சரித்தது போலவும்..

உங்களுக்கே ஒரு தோற்றம் உண்டாக்கிக் கொள்கிற வாக்கியம் அது. அதில் இருக்கிற நகைச்சுவையை புறந் தள்ளுங்கள்.

மாறியுள்ள சர்வதேச நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதுதான் அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சம் தமிழர்கள் சாவதற்கு காரணமா?
இது தான் மார்க்சிய பார்வையா?

ஒரு இடதுசாரியாக, எழுத்தாளராக , தமிழ் நாட்டின் முக்கியமான சிந்தனையாளராக நீங்கள் சொல்கிற எவ்வளவு பெரிய பொய் அது?
முகாம்களில் இருக்கிற மூன்று லட்சம் மக்களை விடுவிக்க இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் போராடிக்கொண்டிருக்கிறது என்று பதில் சொல்கிறீர்கள்.

நான் டெல்லியில் இருக்கிற என்னுடைய பத்திரிகை நண்பர்களை கேட்டேன். டெல்லியில் மார்க்சிஸ்ட்கள் ஈழத்தமிழர்களுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தினார்களா என்று. அவர் இல்லை என்று சத்தியம் செய்தார்.

சரி பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பிக்கள் முழங்கியிருக்கக் கூடும் என்று திரு தொல். திருமா அவர்களுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் நண்பரிடம் கேட்டேன். மார்க்சிஸ்ட்கள் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காகவும் பேசவில்லை, நம் கடல் எல்லையில் சுடப்படுகிற மீனவர்களுக்காகவும் பேசவில்லை என்று பதில் சொன்னார்.

போராடுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே வேறு எங்கு போராடுகிறீர்கள்?

சமீபத்தில் வெங்கடேசன் என்ற சிபிஎம்காரர் ஒரு ஆதீன மடத்தில் ஈழத்தமிழர்களுக்காக அக்கறைப் பட்டு பேசினார் என்று கேள்வி பட்டேன்.

ஒருவேளை அதைத்தான் ஈழத்தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்கிறீர்களோ?

அப்படியானால் அது எவ்வளவு பலவீனமான பொய்யான போராட்டடம்.

இன்றும் தெருமுனையில் தீவிர அரசியல் பேசும் நண்பர்களாக மார்க்சிஸ்ட் தோழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பலரிடமும் ஈழப்போராட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்கிறேன்.

அவர்கள் சகோதரப்படுகொலைகள் செய்தவர்கள் அதனால் எதிர்க்கிறோம் என்கிறார் ஒருவர்.

அவர்கள் முஸ்லிம்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றினார்கள் என்கிறார் இன்னொருவர்.

அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் என்கிறார் ஒருவர்.

இலங்கை சுபிட்மாக இருந்தது.அங்கே பிரச்சினையை கொண்டு வந்ததே விடுதலைப் புலிகள் தான் என்று சொல்கிறார் இன்னொருவர்.அதற்கு அவர் ஆதாரம் காட்டுவது ஷோபா சக்தியின் புத்தகத்தை.

தனி ஈழம் என்ற கோஷத்தையே நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார் இன்னொருவர்.

அவர்கள் தலித்களை கொடுமை படுத்தினார்கள் என்கிறார் ஆதவன்தீட்சன்யா.
நான் இவர்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்வது ,

ஈழப்போராட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள். அது பரவாயில்லை. ஏன் எதிர்க்கிறோம் என்று உட்கார்ந்து பேசி ஒரு அறிக்கை தயார் செய்து ஒரே அறிக்கையை எல்லோரும் பேசுங்கள்.
தான் தோன்றிகளாக ஆளுக்கொரு கருத்தை பேசாதீர்கள் என்பதுதான்.

10 comments:

Anonymous said...

/இந்திய அரசியலில் இன்றும் எளிமையோடும் நேர்மையோடும் அடித்தட்டு மக்களின் மீதான உண்மையான பரிவோடும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை மிகவும் நேர்மையுடன் என்னால் உணர முடியும்./

மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் இந்தியாவிலே வெட்டிப்புதைக்கும் கட்சியும் இதேகட்சிதான். நந்திக்ராம், மாவோபோராளிகளை அமுக்குவதிலே கோரப்பற்களை இளிப்பதைச் சொல்லமாட்டீர்களா?

இவர்கள் இனவாதச்சிங்கள கம்யூனிஸ்டுக்கட்சிகளுக்குக் காட்டும் பரிவினையும் அக்கட்சிகளை நியாயப்படுத்தும் நிலைமையைப் பாருங்கள். இலங்கை வரலாறு இந்தப்பாசிசவாதிகளுக்குப் புரிவதில்லை. கண்ணைமூடிக்கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான புத்தகவாசனைகளோடு எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள்.

இவர்களின் கருத்துச்சுதந்திரம் எதுவரை என்று தெரியுமா தோழர்களே? இவர்களின் பதிவுகளிலே முரண்பட்டுப் பின்னூட்டமிட்டுப் பாருங்கள். இந்தப்பாசிசவெறியர்கள், பார்ப்பன அடிவருடிகள் அனுமதிக்கவேமாட்டார்கள்.

ஸ்ரீலங்கா இந்து ராமினை விமர்சிக்கமாட்டார்கள். ஆதவன் தீட்சண்யா ஸ்ரீலங்கா அரசின் பாதங்களை நக்கிப் பிழைக்கப் போனது பற்றிப் பேசமாட்டார்கள். இந்திய இராணுவம் ஈழத்தமிழர்களை வேட்டையாடியதையும் இப்போது வேட்டையாட உதவுவதையும் முன்னைய இந்தியச்சிப்பாய் தமிழ்ச்செல்வன் ஒத்துக்கொள்ளுவாரா? பேசிப் பேசியே கிடைக்குமா மக்கள் விடுதலை? பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களை விற்றுப்பிழைப்பதுதானா ஒரே வழியென்று மார்க்ஸியம் சொல்கிறது. என்ன மார்க்ஸியம் தோழர்? நீங்களும் நானும் எவ்வளவோ காலம் முன்னுக்கு வந்து மார்க்ஸியத்தையும் சுயவிமர்சனத்தையும் செய்து இயங்கியலை இலங்கச்செய்கிறோம். இந்தப்பாசிசவாதிகள் புத்தகத்தைக் கக்கத்திலே வைத்துக்கொண்டுமட்டும் போதிக்கின்றார்கள்.

நம்மைப்போன்ற அடித்தட்டுமக்களும் கம்யூனிஸ்டுகளும் இன்றைக்கு வெட்கப்பட்டுக்கொள்ளவேண்டியிருப்பது, இவர்களும் தங்களை மார்க்ஸியத்தோடும் கம்யூனிசத்தோடும் அடையாளப்படுத்துவதாலேமட்டுமே.

இவர்களின் சிவப்புமுகமூடிகளுக்குள்ளே அரிவாளும் சம்மட்டியும் ஸ்ரீலங்கா அரசுக்காகவும் இந்தியப்பார்ப்பனிய ஆண்டைகளுக்காகவும் ஓயாமல் ஈழத்தமிழர்களை அரிந்தும் மொத்தியும் கொண்டிருக்கின்றன. இவர்கள் வெறுமனே ஸ்ரீலங்கா அரசின் வடதிசைநாட்டுக்காவல்நாய்கள்மட்டுமே.

செந்தோழன் said...

நண்பரே (தோழரே என்று தான் எழுத நினைத்தேன், அந்தச் சொல்லை கண்ட கழிசடைகளும் இணையவெளி எங்கும் வீணாக்கித் தொலைத்ததால்)

ஆதவன் தீட்சண்யா முகமூடி கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது, அதனூடே அவரது கோர முகம் அம்பலப் பட்டு நாளாயிற்று. ச.த மற்றும் பிற்போக்கு எழுத்தாளர் சங்கக் கோஷ்டிகளின் அபத்தங்களும் அவ்வப்போது வெளிப்படுவதே! ஈழ ஆதரவாளர் சிலர் உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதை இணைத்தில் பார்க்கலாம். அதிலெல்லாம் வெறும் சினம் சார்ந்த வெளிப்பாடுகளே விரவிக் கிடைக்கும், தாங்கள் போன்றோர் அறிவார்ந்த தளத்தில் ஒவ்வோர் சங்கதியையும் விரிவாக ஆய்ந்து விளக்கி பதிலுரைப்பதும் அவசியமானதே! மகிழ்ச்சியளிப்பதே!

ச.தமிழ்ச்செல்வன் said...

மிக்க நன்றி தோழர்.தங்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ள கட்சியைக் கேட்டுக்கொள்கிறேன்.நிற்க. புலிகளை விமர்சித்து எழுதுவதே விஷ வார்த்தை என்றால் அது எப்படி சரியான பார்வை?காங்கிரஸ் தலவரைக் கொன்றதால் மட்டும்தான் காங்கிரஸ் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறது என்று கூறுவது அரசியலற்ற பார்வை அல்லவா?அப்படியானால் முன்னர் புலிகளுக்கு ஆயுதப்பயிர்சி அளித்து ஆயுதங்களும் அளித்து பெரும் தொகையான பணமும் கொடுத்ததே இதே காங்கிரஸ் அர்சு அதை என்ன என்பது தோழர்? எல்லாமே அவர்களின் வர்க்க அரசியல் நிலைபாட்டிலிருந்துதான் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா?

ஒரு இயக்கத்தின் பல்வேறு மட்டத் தொண்டர்கள் ஒரே அறிவுத்தளத்துடன் இயங்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது மிகச்சரிதான்.ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை.இதேபோல சோவியத் ஏன் வீழ்ந்தது என்று கேட்டாலும் பல்வேறு தளங்களில் பணியாற்றும் மார்க்சிச்ட் தோழர்களிடமிருந்து ஒரே கருத்து வராது.கருத்தொற்றுமையை உருவாக்குவதற்கான போராட்டம்தானே கம்யூ.இயக்கத்தில் ஒரு முக்கியமான போராட்டம்.அதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
புலிகள் 100 சதம் புரட்சியாளர்கள் என்று நீங்கள் கருதுவதால் கோபத்துடன் எம்மைப் பார்க்கிறீர்கள்.நாங்கள் அப்படி பார்க்கலியே தெலைவா.ஜனநாயகக் குரல்கலை அழித்தது,கட்டாய ஆட்சேர்ப்பு,குழந்தைகலை படை முன்வரிசையில் ஆயுதங்களுடன் நிறுத்தியது,முஸ்லீம் மக்களைத் துரத்தியது,ஈழத்துக்காகக் குரல் கொடுக்கத் தன்னைத் தவிர வேறு யாரும் இல்லாமல் பார்த்துக்கொண்டது என எனக்கு விமர்சிக்கவும் புலிகளின் பாதையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் பல காரணங்கல் இருக்கின்றன.அதற்காக உடனே நான் ராஜபக்‌ஷேயின் கைக்கூலி ஆகி விடுவேனா?இது என்ன பார்வை ?டெல்லியில் மட்டுமல்ல அஸ்ஸாம்,திரிபுரா,மராட்டி,குஜராத் என்ரு வேறு எந்த மாநிலத்திலும் கூட மார்க்சிஸ்ட்டுகள் இலங்கைத்தமிழர்க்ஜளுக்காகப்ம்போராட்டம் நடத்தவில்லை.தமிழ் நாட்டில் முன்பு என்ன போராட்ட வடிவங்களில் பிர அமைப்புகள் போராடினவோ அதே ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைத்தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட்டுகள் இப்போது நடத்துகிறார்கள்.இவ்வரிகளை எழுதும்போதே இதெல்லாம் எதுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன் தேவையில்லாமல் என்று மனதில் ஓடுகிரது.முகாம்களில் இருக்கும் மக்கள் உடனடியாக வீடு திரும்ப யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆதரிப்பேன்.அந்தமனநிலை மட்டும்தான் இப்போதைக்கு எனக்கு இருக்கிரது.புலிகளை விமர்சிப்பது இப்போது தேவையற்றது.நீங்கள் கிலப்பி விட்டதால் பேசிவிட்டேன்.விடுங்க தோழர்.என விமர்சனத்தை மதித்து இவ்வளவு நீண்ட கடிதம் எழுதியமைக்கு என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.மக்கள் முகாம்களிலிருந்து முதலில் வீடுகளுக்குப் போகட்டும்.மற்றதெல்லாம் பிறகு பேசிக்கொள்வோம்.யார் நிலைபாடு சரி பேச இப்போது அவசியமில்லை.நாம் பரஸ்பரம் நற்சான்றுகளையோ அவதூறுகளையோ அள்ளி வீசிக்கொண்டிருப்பதால் அங்குள்ள மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிரது?

மாதவராஜ் said...

அன்புள்ள யோகராஜ்!

என்னைப்பற்றி இந்தப் பதிவில், ’என் மனமாற்றத்துக்கு பிரபாகரனின் மரணம் தேவைப்பட்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். வேதனை தருகிற, சீண்டுகிற சொல்லாடல் இது. இப்படிச் சொல்வதில் உங்களுக்கு என்ன திருப்தி என புரியவில்லை.

அடுத்தது பிரபாகரனை மாபெரும் தலைவராக பார்க்கிற மனமாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. ராஜீவ் காந்தி மரணமும், பிரபாகரனின் மரணமும், வரலாற்றில் எந்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் என்பதைத்தான் நான் அந்தப் பதிவில் சுட்டிக் காட்டி இருந்தேன். அதைத்தான் “சரியோ, தவறோ.... வரலாற்றில் இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பிரபாகரன் ஒரு அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்கிறார் என்பது உண்மை.’ என நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அதாவது ராஜீவ் காந்திக்கு வரலாற்றில் அப்படியொரு இடமில்லை என்பதைத்தான் சொல்லி இருந்தேன்.இதற்கு விளக்கமளித்து எனது அடுத்த பதிவில்
//இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நான் அறிந்தவரையில், பிரபாகரனின் மீது சில அழுத்தமான விமர்சனங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது, மக்களை இராணுவ ரீதியாக திரட்டிய அவர், அரசியல் ரீதியாக திரட்டவில்லை என்பது. சயனைடு குப்பிகளைக் கொடுத்த இயக்கம், உரிமைகளுக்காக கிளர்ந்தெழ மக்களுக்கு அரசியல் ஞானம் அளித்திருக்க வேண்டும். மக்கள், தெருக்களில் நின்று பீரங்கிகளையும், இராணுவத்தையும் எதிர்க்கிற வேகத்தை, அரசியல் கருத்துக்களே உருவாக்க முடியும். மக்களுக்கு முன்னால் எந்த ஆதிக்க சக்திகளும் செல்லுபடியாகாது. அப்படித்தான் வியட்நாமில் மக்களிடம் தோற்றது அமெரிக்கா. நேபாளத்தில் நடப்பதும் இதுதான். இந்த இடத்தில் பெரும் ஊனம் உண்டு. (இதை நான் என்னுடைய ‘ராஜாவுக்கு செக்’ என்னும் சொற்சித்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தேன்.)// என்றும் சொல்லி இருந்தேன். அதையும் சேர்த்து நான் சொன்ன அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஜெரி ஈசானந்தா. said...

வழிமொழிகிறேன்

Ambedhan said...

யோகு,
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு..இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் தீர்வு.. அரசியல் போராட்டத்தின் மூலம் தீர்வு காண வாய்ப்பு இருக்கிறது, இருந்தது..புலிகள் இவை எல்லாவற்றையும் கெடுத்தார்கள்..என்கிற ரீதியான பதில்கள் தான் சி.பி.எம். மின் நிலைப்பாடுகளாக எனக்குக் கிடைத்த பதில்கள்.
இதை விட ஏதும் புதிதாக பதில்கள் கிடைக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். சி.பி.எம். தோழர்கள் பொதுவாக கட்சி மேலிடம் நிலைப்பாடு தவறு என்று அறிக்கை விடும் வரை அந்நிலைப்பாட்டை எந்த விதமாகவும் விளக்கம் கொடுத்து ஞாயப்படுத்தவே விளைவார்கள். கட்சியின் கட்டுக்கோப்பிற்கு இது முக்கியம் என நினைக்கிறார்கள் போலும்.

vanathy said...

Yogaraj,
thank you for your article.
It is really sad the so called socialists and marxists in India do not support the eelam tamil political struggle.
However Eelam Tamils have some allies among left wing parties.
Today I happened to read this article on the world socialist workers website,this was about the visits by Tamil nadu MPs,note this was written by a sinhalese person.
-vanathy

Phoney Indian concern about Tamil detainees in Sri Lanka
By Sarath Kumara
19 October 2009
A delegation of parliamentarians from the south Indian state of Tamil Nadu arrived in Sri Lanka on October 10 to visit the country’s detention camps, where more than 250,000 Tamil civilians have been incarcerated since the end of the Sri Lankan civil war in May.


The trip was a cynical public relations exercise on both sides. For the Sri Lankan government, it was an opportunity to enlist the support of Indian politicians to cover up its gross abuse of democratic rights. The Colombo government describes the centres as “welfare villages” but the Tamil civilians are not permitted to leave the camps, which are run by the military, surrounded by barbed wire and guarded by soldiers. Entry into the camps is barred to the media and opposition politicians, and aid organisations operate under severe restrictions.


For their part, the Indian delegation was seeking reassurances, no matter how empty, to placate public opinion in Tamil Nadu as well as exploring economic opportunities in the military-controlled North and East of Sri Lanka. Tamil Nadu has longstanding ties with the Tamil minority in Sri Lanka. The final offensives against the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE), during which the Sri Lankan military indiscriminately bombarded LTTE-held territory, killing thousands of civilians, provoked widespread protests in Tamil Nadu.


The delegation consisted of 10 representatives of the ruling parties in Tamil Nadu—the Dravida Munnettra Kazhagam (DMK), Congress (I) and the Viduthalai Chiruthaigal Katchi. It also included Kanimozhi, the daughter of Tamil Nadu Chief Minister M. Karunanidhi and a former union (national) minister T. R. Baalu. No opposition party was represented.


The delegation gave no press conferences in Colombo. On its return to India, however, Tamil Nadu Chief Minister Karunanidhi, who received a report, said he was “satisfied” with the work of the Sri Lankan government. He claimed that the delegation had been reassured that “more than 58,000 Tamils would be sent to their respective villages within 15 days and the rest would be gradually resettled in their native places”.


However, as a Sri Lankan parliamentarian told yesterday’s Sunday Times, the plan to resettle 58,000 detainees had been in the pipeline for a while. Facing international criticism, Sri Lankan President Mahinda Rajapakse had originally planned to resettle all “refugees” within six months. Even if the government keeps its latest promise, there will still be more than 200,000 civilians inside its prison camps.


The stock pretext by the Colombo government for the delays is that the military needs to de-mine the areas before any resettlement. As reported in the Hindu, Sri Lankan defence secretary Gotabhaya Rajapakse told the Indian delegation that the LTTE remained a threat and that many unidentified LTTE cadres were still in the camps. In other words, a quarter of a million civilians are being treated as prisoners of war, arbitrarily detained and deprived of their basic legal and constitutional rights.

vanathy said...

I must conitue it as it wouldn't accept the whole article
-vanathy

The Hindu reported that the delegation had held discussions on the resumption of transport links between northern Sri Lanka and Tamil Nadu. Indian big business, particularly in Tamil Nadu, is keen to exploit the economic opportunities opening up on the island following the end of the 26-year war.


The appalling conditions inside the camps could not be completely ignored. A Congress representative on the delegation, Aaron Rashid, told the Sunday Times that detainees had complained of “the acute shortage of water” and “pregnant women were particularly distressed”. Rashid spoke of the inadequacy of the housing and food, and the danger of flooding during the coming monsoon season.


However, neither the Tamil Nadu state government nor the Congress-led national government has publicly criticised the Rajapakse regime in Colombo over its treatment of Tamil detainees. According to Reuters, the Indian government offered Sri Lanka another $100 million to help resettle the detainees and rebuild the war-ravaged North, contingent on a plan of action from Colombo. A similar package in July made no difference to fate of the detainees and only underscored India’s tacit support for these prison camps.


A comment by the US-based Human Rights Watch (HRW) on October 10, calling for the immediate release of all detainees, highlighted the conditions facing the Tamil detainees. Noting that there had been clashes between camp residents and the military, HRW’s Asian director Brad Adams said: “With all these people penned up unnecessarily in terrible conditions, the situation in these camps is getting tense and ugly. If they aren’t out of there before the monsoons hit, their lives and health will be in serious danger.”


According to the UN, by the end of September, the number of detainees stood at 255,551. HRW explained that the government’s claim last month to have returned 40,000 people to their districts were simply false. In reality, many of the people “have been transferred from Manik Farm to other detention camps, while others are still held at a ‘way station’, a temporary holding facility, in Vavuniya.”


Adams accused the government of lying. “While the government has the right to screen displaced persons for security reasons, the process has turned into a ruse to hold as many Tamils for as along as possible in the camps. The government’s untruthful statements and promises should not fool anybody anymore,” he said.


The HRW statement referred to the deteriorating conditions inside the camps, particularly the lack of water. Inmates of the large Manik Farm centre pointed out that because of low water levels in the nearby river, only limited water had been pumped since October 5. Though the recommended minimum is 15 litres of water per person per day, a family gets only 30 litres per day, regardless of its size.

vanathy said...

continues

A detainee, Jeevitha, told HRW: “This morning I managed to get only 20 litres for our family of five. I won’t be able to get more until tomorrow and this water is all we have for drinking, cooking, washing and bathing. For the last three days we have not been able to take a bath or clean properly. It is agony, and the camp administration here does not seem to care about us.”


The strong winds in late September and early October damaged shelters and exacerbated already difficult living conditions. Another detainee, Kumaravel, said: “The winds are tearing branches off the trees and tin sheets off the huts, which then fall on the tents. We are forced to cook outside and the wind blows dust and mud into our food, making it practically inedible. It is very difficult to live here.”


The camps are grossly overcrowded. In Zone 2 of Manik Farm, 52,000 refugees share facilities that according to UN standards should hold no more than 29,000 people. Kumaravel’s family lives in this zone and shares a tent with another family of four. While the women sleep inside, the men sleep outside or in makeshift classrooms. The emergency tents and shelters set up in April and May, which were designed to last three to six months, are also deteriorating.


The Socialist Equality Party has launched a campaign to demand the immediate release of all Tamil detainees, the closure of the camps, proper assistance to the refugees to rebuild their lives and the withdrawal of security forces from the North and East of Sri Lanka. The SEP calls on workers, young people and all those concerned with the defence of democratic rights to send protest letters to the Sri Lankan authorities.


The author also recommends:
Demand the release of Tamil detainees in Sri Lanka

மானுட கலை said...

இந்தியாவின் முற்போக்கு ஆர்.எஸ்.எஸ். சி.பி.எம்....
இந்தியாவின் பிற்போக்கு சி.பி.எம். ஆர்.எஸ்.எஸ் ....

Post a Comment