Monday, May 3, 2010

ம க இ க பாதை! மடையர் பாதை! – 7.12

கம்யூனிஸ்ட்கள் என்றால் அறிவாளிகள் என்று ஒரு பொது எண்ணம் முன்பு சமூகத்தில் இருந்தது.

இப்போது கம்யூனிஸ்ட்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் போய் ஒரு மாமாங்கம் ஆகி விட்டது.

வெகுஜனப்பரப்பில் ஓரளவு வேலை செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஎம்மும் சிபிஐயும் முட்டாள்களாக ஆகியிருக்கிறார்கள் என்றால் மகஇக வினர் ஒரு படி மேலே போய் மடையன் சாம்பிராணி ஆகியிருக்கிறார்கள்.

மகஇக வினர் சமீப காலங்களில் இலக்கிய உலகை நோக்கி செய்து கொண்டிருக்கிற காரியங்கள் இவர்கள் மடையன் சாம்பிராணிகள் என்பதை உறுதி செய்கின்றன.
கவிஞர் சங்கர ராமசுப்பிரமணியன் வீட்டிற்கு மகஇக ரௌடிகளை அனுப்பி அவருடைய மனைவியிடம் ராமசுப்பிரமணியன் எழுதிய ஒரு கவிதையில் இருந்த பாலியல் சார்ந்த வார்த்தைகளை வாசித்துக் காட்டி விளக்கம் சொல்லும் படி கேட்டு அவரை பயமுறுத்தியிருக்கிறார்கள்.

கவிஞர் விக்கிரமாதித்தியனை ஆட்டோவில் அழைத்துச் சென்று துன்புறுத்தி அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

லீனா மணிமேகலையின் கூட்டத்தில் காட்டுமிராண்டிகள் போல் நடந்திருக்கிறார்கள்.அது மட்டுமில்லாமல் லீனா மணிமேகலையின் பாலியல் வார்த்தைகள் கொண்ட கவிதைகளை அச்சடித்து அவர் குடியிருக்கும் பகுதிகளில் விநியோகிப்போம் என்று பிளாக்மெயில் செய்கிறார்கள்.

முன்பு பிஜேபி ஆட்சியில் இருக்கும் போது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் ஒரு கூட்டமாக வந்து ஜெய் ராம் சொல்லச் சொல்வார்கள். நாம் சொல்ல மறுத்தால் மிரட்டுவார்கள். நம் வீட்டில் இருக்கும் பெண்களை பயமுறுத்துவார்கள். இன்று ஆர்எஸ்எஸ்ஸின் அபாயம் ஓரளவு நீங்கிய நிலையில் புதிய குண்டர்களாக மகஇக ரௌடிகள் உண்டாகியிருக்கிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு தொற்று நோய் போல் தொற்றிக்கொண்டிருக்கும் விஷயங்களில் இந்தத் திமிர்தனமும் ஒன்று.
அவர்கள் தங்களை இந்த உலகை ரட்சிக்க வந்தவர்களாக நினைத்துக் கொள்வார்கள். சமூகத்திற்கு நல்லது செய்ய வந்தவர்கள் நாங்கள் என்ற மமதையில் அவர்களின் அறிவிற்கு எட்டாத விஷயங்களையெல்லாம் தவறான விஷயங்கள் என்று முடிவு செய்து அழிக்க முயற்சி செய்வார்கள்.

க்யூபாவில், புரட்சிக்குப் பின்னரான சமூகத்தில், அங்கே ஹோமோசெக்சுவல்ஸ் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களையெல்லாம் விரட்டி விரட்டி நாயைப் பிடிப்பது போல பிடித்து, அவர்களை ஒரு கப்பலில் ஏற்றி கனடாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.அவர்களில் நிறைய பேர் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பேராசிரியர்கள்.
இந்த நூற்றாண்டின் மகத்தான சிந்தனையான மார்க்ஸியம் , உலகின் பலநாடுகளில் இருந்தும் தூக்கி எறியப்பட்டதற்கு இவர்களைப் போன்ற குண்டர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததே காரணம்.

எழுத்தாளர்கள் , கவிஞர்கள் என்பவர்கள் ஒரு சமூகத்தின் சிந்தனையாளர்கள். அவர்கள் எதைப்பற்றியும் சிந்திப்பதற்கும் அதை பதிவு செய்வதற்கும் இந்த ஜனநாயக சமூகம் உரிமை வழங்கியிருக்கிறது. அவர்கள் நாலாவிதமாகவும் யோசிப்பார்கள்.அவர்கள் யோசிப்பதன் கூட்டுமையே ஒரு சமூகத்தை ஒரு கட்டத்திலிருந்து மேலான இன்னொரு கட்டத்திற்கு இட்டுச் செல்லும்.

யாரோ சிலர் கீழ்மையானதாக யோசிப்பதால் அது ஒட்டு மொத்த சமூகத்தையும் கீழ் நிலைக்கு கொண்டு போய் விடாது. யாரோ சிலர் மிகவும் மேன்மையானதாக யோசித்து விடுவதால் அது ஒட்டு மொத்த சமூகத்தையும் மேலான நிலைக்கு கொண்டு சென்று விடாது. கீழான சிந்தனைகளை ஒரு சமூகம் அதுவே பரிசீலித்து கீழே தள்ளி விட்டு சென்று விடும். இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இது தான் சமூக சிந்தனையின் செயல்பாடு. இதற்கிடையே ஒரு சிந்தனையாளனின் கடமை தான் சிந்திப்பதை பதிவு செயவதே.

ஒரு சமூகம் புறக்கணிக்கும் விஷயத்தை சிந்தித்தவர்களும் சமூக நன்மைக்காக செயல்பட்டவர்கள்தான்.ஒரு சமூகம் உள்ளெடுத்துக் கொண்ட விஷயத்தை சிந்தித்தவர்களும் சமூக நன்மைக்காக செயல்பட்டவர்கள் தான்.
இந்த அடிப்படை அறிவு இல்லாத காரணத்தால் தான் நாம் தான் இதற்கு ஜவாப்தவாரி என்று முடிவு செய்து இந்த மகஇக மடையர்கள் இப்படி யோசி அப்படி எழுது என்று கட்டளையிட்டு குண்டாந்தடியோடு அலைகிறார்கள்.

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரவாணிகள் ஹோமோசெக்சுவல்ஸ், லெஸ்பியன்ஸ் போன்ற வார்த்தைகளெல்லாம் அருவருப்பான வார்த்தைகளாக இருந்தன. அதை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர்கள் இழிவான மனிதர்கள் என்ற நிலை இருந்தது.சாருநிவேதிதா, ரமேஷ் பிரேம், சி.மோகன், இவர்களைப் போன்ற சில பத்து எழுத்தாளர்கள் அவர்களைப் பற்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்று ஹோமோசெக்சுவல்ஸ் ,லெஸ்பியன்ஸ், அரவாணிகள் இவர்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்கள் என்றாகி அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து உண்டாகத்துவங்கி இருக்கிறது. இந்த அளப்பரிய பணியை செய்தது எழுத்தாளர்களே அன்றி இந்த மகஇக மடையர்கள் இல்லை. உண்மையில் இந்த மகஇக மடையர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்று எதுவும் இல்லை.

அரவாணிகள் ஹோமோசெக்சுவல்ஸ், லெஸ்பியன்ஸ் இவர்களுக்கு சமூக அந்தஸ்த்து உருவாகத்துவங்கிய வரலாற்று நிகழ்வு சாருநிவேதிதா மதுரையில் போட்ட ஒரு நாடகத்திலிருந்து துவங்கியது.அந்த நாடகத்தில் பாலியல் சார்ந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அன்று அந்த நாடகத்தை நடைபெறவிடாமல் சிபிஎம் குண்டர்கள் தடுத்தார்கள். மேடையேறி நடிகர்களை இயக்குனரை அடித்தார்கள். இன்று அந்த காரியத்திற்காக வெட்கப் பட வேண்டியவர்களாக சிபிஎம் காரர்கள்தான் இருக்கிறார்களே தவிர சாருநிவேதிதா இல்லை.

சாருநிவேதிதா ரமேஷ் பிரேம் சி.மோகன் போன்ற எழுத்தாளர்கள் ஒரு பத்தாண்டுகளில் ஒரு மௌனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள். இந்த கலாச்சார குண்டர்களைப் போல வெறுமனே உண்டியலிடித்து வயிறு வளர்க்க வில்லை.

முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது யாருக்கேனும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதிமுக பெண் ரௌடிகளை அனுப்பி அவர்களை நோக்கி பாவாடையை தூக்கி காட்டச் செய்வார். அன்று லீனா மணிமேகலையின் கூட்டத்தில் மகஇக பெண் தோழர்கள் அந்த ஒரு காரியத்தை மட்டும் செய்யவில்லை. மகஇக இன்னும் அந்த உத்தரவை போடவில்லை போலிருக்கிறது. அடுத்த முறை அதையும் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் மட்டும் எப்பொழுதும் குண்டர்களாகவே பயன்படுத்தப் படுகிறார்கள்.அதிமுகவாக இருந்தாலும் அதுதான் உண்மை. மகஇக வாக இருந்தாலும் அதுதான் உண்மை.

யோனிக்கவிதை யோனிக்கவிதை என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏன் மகஇக கார ர்கள் யாரும் யோனியை பயன்படுத்துவதில்லையா? மகஇக பெண் தோழர்கள் யாருக்கும் யோனி இல்லையா?இவர்கள் யாரும் புணர்வதில்லையா? தோழர்கள் யாரும் சுயமைதுனம் செய்வதில்லையா? திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு யோனி இருந்தால் என்ன செய்வார்கள்? யோனியை அறுத்து எறியச் சொல்வார்களா?ஏன் யோனி இவர்களுக்கு இவ்வளவு அலர்ஜியாக இருக்கிறது?

எல்லோரும் யோனி வழியாகவே வருகிறோம்.யோனியைப் பார்க்க அலைகிறோம்.யோனி கிடைத்தால் சுவைக்கிறோம். யோனியைப் புனர்கிறோம். யோனியைக் கடிக்கிறோம். யோனியைக் குதர்கிறோம்.யோனியில் குண்டு வைத்து தகர்க்கிறோம். இவ்வளவு காரியங்கள் யோனியில் செய்யும் போது, யோனியை வைத்து கவிதை மட்டும் எழுதக்கூடாதா?
லீனாவின் கவிதையை விமர்சனம் செய்யக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை.விமர்சனம் செய்யுங்கள். பதில் கவிதை எழுதுங்கள்.லீனா கூட்டம் போட்டால் பதில் கூட்டம் போடுங்கள். ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கு வந்து குழப்பம் உண்டாக்குவது உங்களின் திமிரையே காட்டுகிறது.

அது போதாது என்று லீனாவின் கவிதையை அச்சடித்து அவர் குடியிருக்கும் இடங்களில் இருக்கும் மக்களிடம் விநியோகிப்பார்களாம். ஏனென்றால் நம்மைச் சுற்றி இருக்கிற மக்கள் தான் அளவு கோளாம்.

லீனா மட்டும் அல்ல, மகஇக காரர்கள் உட்பட இங்கே பலரும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள் அங்கீகரிக்காத வாழ்க்கை முறைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக நாம் சாக முடியாது. அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக நாம் வாழவும் முடியாது.

ஒரு மகஇக தோழர் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று இவர் மகஇக வைச் சேர்ந்தவர் இன்னென்ன போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். இன்னென்ன போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார் என்று ஒரு நோட்டீஸ் அச்சடித்து கொடுத்தால் அவர் அந்த பகுதியில் வாழ முடியுமா?. அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரால் உடனடியாக காலி செய்யப் படுவார்.

அப்படி செய்வேன் என்பது அப்பட்டமான மிரட்டல். கீழ்த்தரமான ரௌடிகளின் வேலை.
மிகவும் தீர்மானமாகவே மகஇக வினர் ரௌடிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
குள்ளர்களை ஒருபோதும் தண்ணீர் ஊற்றி வளர்க்க முடியாது. அது போல மகஇக வினரையும் ஒரு போதும் விவாதித்து சரி செய்ய முடியாது. அவர்களுக்கு படிப்பறிவு குறைவு.பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்று மார்க்ஸிய புத்தகங்களில் வரும் வாக்கியத்தை படிக்காதவர்களின் சர்வதிகாரம் என்பதாக புரிந்து கொண்டு அதற்கு தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்காக படிப்பறிவில்லாமல் இருப்பவர்கள். முதியோர் கல்வித்திட்டம் போல ஒன்றில் சில புத்தகங்களை மட்டும் வாசித்து விட்டு உலக ஞானத்தை அடைந்து விட்டதாய் மதர்ப்பில் இருப்பவர்கள்.

ஒரு படிப்பறிவில்லாத கூட்டம் தனக்கு அறிவு இருப்பதாக நினைப்பது போல ஆபத்து உலகிற்கு வேறு எதுவும் இல்லை. ஹிட்டலர் முசலோனியில் துவங்கி பல சர்வதிகாரிகளும் இந்த நம்பிக்கையுடனே உலகத்திற்கு பெரும் கேட்டை விளைவித்தார்கள்.இன்று மகஇக வினர் சரியாக அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசியற் பரப்பில் .001% கூட அங்கீகாரம் இல்லாத இவர்கள், தமிழகத்தின் எந்த தளத்தாலும் அங்கீகாரிக்கப் படாதஇவர்கள் தனக்கு இந்த அதிகாரமெல்லாம் இருக்கிறது என்று நினைப்பது ரௌடிகள் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்வது போலத்தான் இருக்கிறது.
அதுவும் வினவின் சமீபகால நடவடிக்கைகளைப் பாருங்கள். அவர்கள் தம்மை ரௌடிகளாக மாற்றிக் கொண்டிருப்பது புரியும்.

வினவு தளத்தில் லீனாவைப் பற்றிய கட்டுரையில் கவிதை எழுதுவது பற்றி ஒருவர் சொல்லும் கருத்தைப் பாருங்கள்.

‘’மூளையின் இடது பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்காததால் சற்று ஊனமுற்றவர்கள், அதனை சரிக்கட்ட வலது பகுதியை சார்ந்திருக்கும் முயற்சி இது. யோனி, குறி என்று எழுதி புரட்சிப் பட்டம் வாங்கும் இந்த அறிவுத்துறை தப்பிலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் சூட்டிக் கொள்வதும், எனது வெளிப்பாட்டு மொழி கவிதை என்பதும் ஒரு தரம் தாழ்ந்த தந்திரம்.’’ - வினவு

எழுத்தாளர்கள் கவிஞர்களைப் பற்றிய எவ்வளவு வக்கிரமும் வெறுப்புணர்வும் கொண்ட வாக்கியம் இது என்பதைப் பாருங்கள்.

இந்தத் தப்பிலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் புரச்சீ நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றி நம்மையெல்லாம் ஆளப் போகிறார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் இன்று இவர்கள் நடந்து கொள்வதைப் போன்ற தப்பிலித்தனம் தான் அன்று அவர்களின் ஆட்சி தர்மமாகவும் இருக்கும்

அன்பிற்குரிய எழுத்தாளர்களே !

மக இக ஃபாஸிஸத் தன்மை கொண்ட அமைப்பாக வெளிப்டத் தயாராகி விட்டதை உணருங்கள்.

அவர்களுடனான பகையை அறிவியுங்கள்.

உங்கள் நண்பர்களில் மகஇக வினர் இருந்தால் அவர்களை நட்பு வட்டத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.

அவர்களுக்கு நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்.

அவர்களின் அமைப்பை ஆய்வு செயவதையும் , அவர்களின் அமைப்பில் பெருக்கெடுத்து ஓடும் வக்கிரத்தையும் வெறுப்பையும் அம்பலப் படுத்துவதையும் தொடர் வேலையாக க் கொள்ளுங்கள்.

அன்பான மக இக பெண் தோழர்களே! உங்கள் யோனிகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். யோனி மீதி உங்கள் ஆண் தோழர்களுக்கு இருக்கிற வெறுப்பில் ஒரு நாள் உங்களது யோனிகளை இவர்கள் கிழித்தெறியக் கூடும்.! ஏனெனில் மகஇககாரர்களுக்கு அடிப்படையாய் இருப்பது அறிவின் மீதான வெறுப்பு, யோனியின் மீதான வெறுப்பு மட்டுமே.

5 comments:

தமிழ்நதி said...

வாசித்தேன் யோகராஜ், சிலவிடயங்களில் உடன்பாடில்லை. மற்றபடி முக்கியமான கட்டுரை. 'குள்ளர்களைத் தண்ணீர் ஊற்றி வளர்க்கமுடியாது'என்ற வாசகத்தை முடிந்தால் நீக்கிவிடுங்கள். அரவாணிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பவர்களுள் அவர்களும் தகுந்த உடல்வளர்ச்சியின்மையால் வருகிறார்கள். நான் தனிமடல் இடுகிறேன். எல்லாவற்றையும் சர்ச்சையாக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு சொல்லைச் சொல்வதென்பது கத்தியின் மீது நடப்பதுமாதிரி ஆகிவி்ட்டது.

யோகராஜ் பக்கங்கள் said...
This comment has been removed by the author.
சுகுணாதிவாகர் said...

தோழர்,

ம.க.இ.க மீதான உங்களது கட்டுரை பல இடங்களில் விமர்சனம் என்பதைத் தாண்டி அருவெறுப்பான நிலைக்குச் சென்று விட்டது. பாலியல் கவிதைகள் குறித்து அவர்களுக்கு ஒரு புரிதல் இருக்கிறது. குறிப்பாக லீனாமணிமேகலையின் கவிதைகள் குறித்து அவர்களின் புரிதலின் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அது அவர்களது உரிமை. ஆனால் அந்த எதிர்ப்பின் வெளிப்பாட்டு வடிவங்களையும் அந்த எதிர்ப்பினூடாக வெளிப்படும் ஆண்மய்யச் சொல்லாடல்களையும்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக ம.க.இ.கவை எதிர்நிலையில் நிறுத்துவது அல்ல. ஆனால் நீங்களோ ம.க.இ.கவை ஒரு சமூகவிரோத இயக்கம் என்பதைப் போல காட்ட முயன்றிருக்கிறீர்கள். இது தவறு.

/ஏன் மகஇக கார ர்கள் யாரும் யோனியை பயன்படுத்துவதில்லையா? மகஇக பெண் தோழர்கள் யாருக்கும் யோனி இல்லையா?இவர்கள் யாரும் புணர்வதில்லையா? தோழர்கள் யாரும் சுயமைதுனம் செய்வதில்லையா? திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு யோனி இருந்தால் என்ன செய்வார்கள்? யோனியை அறுத்து எறியச் சொல்வார்களா?/

/
அன்பான மக இக பெண் தோழர்களே! உங்கள் யோனிகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். யோனி மீதி உங்கள் ஆண் தோழர்களுக்கு இருக்கிற வெறுப்பில் ஒரு நாள் உங்களது யோனிகளை இவர்கள் கிழித்தெறியக் கூடும்.!/

இந்த வரிகள் எல்லாம் மிக மிக கீழ்த்தரமானவை. வன்மையாகக் கண்டித்தக்கவை. இதன் பெயர் விமர்சனங்கள் அல்ல. வினவு இணையதளத்தில் சில தோழர்கள் செய்த அதே தவறை நீங்கள் ம.க.இ.க எதிர்ப்பு என்ற பெயரில் செய்கிறீர்கள். மேலும் ம.க.இ.கவுடனான முரண் என்பது நட்பு முரண் தானே தவிர பகைமுரண் அல்ல என்பதே எனது கருத்து. அவர்கள் அர்ப்பணிப்பையும் நேர்மையையும் அங்கீகரித்து அவர்கள் மீது விமர்சனம் வைப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்குமே அல்லாது, அவர்களது பங்களிப்புகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து விமர்சிப்பது அல்ல. அவர்கள் பல போராட்டங்களை நடத்திருக்கிறார்கள். அவற்றில் பல குறிப்பிடத்தக்கவை, சரியானவை.

/அன்பிற்குரிய எழுத்தாளர்களே !

அவர்களுடனான பகையை அறிவியுங்கள்.

உங்கள் நண்பர்களில் மகஇக வினர் இருந்தால் அவர்களை நட்பு வட்டத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.

அவர்களுக்கு நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்/

என்று சொல்வதுதான் பாசிசச் சிந்தனை. ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பு நம்மோடு சில விஷயங்களில் முரண்படும்போடு அதைத் தடை செய்யச் சொல்லி அறைகூவல் விடுப்பதையோ, அதன் இயக்கத்தை முடக்க நினைப்பதையோ மக்கள் மீது அக்கறையுள்ளவள்/ன் செய்ய மாட்டாள்/ன். இதே விமர்சனங்களை நீங்கள் அரசியல்ரீதியாக வைத்திருக்க முடியும். மேலே உதாரணங்களாக நான் குறிப்பிட்டிருக்கும் உங்கள் வரிகள் ம.க.இ.க தோழர்களிடம் ஆத்திரத்தைக் கிளப்புமே தவிர, அறிவார்ந்த விவாதத்தை அல்ல. ஒருவேளை, ‘ம.க.இ.க.காரர்களுக்கு அறிவு கிடையாது, அறிவார்ந்த விவாதத்திற்கு அவர்கள் வரமாட்டார்கள்’ என்றுகூட நீங்கள் சொல்லலாம். ஆனால் அப்படியே இருந்தால் கூட நாம் நேர்மையான திறந்த அரசியல் விவாதத்திற்குத்தான் தயாராக இருக்க வேண்டுமே தவிர, இது மாதிரியான கொச்சைப்படுத்தல்களில் ஈடுபடக்கூடாது.

Unknown said...

ந்ண்பருக்கு,

இன்றுதான் உங்கள் தளத்தின் அத்தனை பதிவுகளையும் படிக்க நேர்ந்தது. அருமையான ஆய்வுகள்,விளக்கங்கள்.
மேலும் மேலும் எழுதுங்கள், வாழ்த்துக்கள்

thiagu1973 said...

நண்பரே!

மக இகவினருடன் பழகியவன் என்ற முறையில் நானும் கூட்டத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதம் பற்றி விமர்சனம் செய்துள்ளேன்

அவர்களுடன் நட்பாகவே முரண்படுகிறேன்.

நினைத்துபாருங்கள் ,

இந்து மத பாசிசம் , இஸ்லாமிய வெறியர்கள் ,
முதலாளித்துவ வாதிகள் மற்றும் இன்னபிற எதிரிகளுடன் அவர்களது போராட்டம் எல்லா தளத்திலும் நடக்கிறது .

அவர்களது இந்த சிறு தவறு ஒரு வெள்ளை வேட்டியில் விழுந்த சிறு புள்ளி கறையாக நான் பார்கிறேன் நீங்களோ அது கிழிந்த வேட்டி என்கிறீர்கள்

தவறுகளை திருத்தி கொள்வார்கள்
அதே நேரம் விமர்சிப்பது என்பது அவர்களை கேவலமாக திட்டுவது இல்லை

www.thiagu1973.blogspot.com

இதுதான் எனது வலைப்பூ இதில் அவர்களது செயலுக்கு விளக்கம் கேட்டு மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன்

பாருங்கள்

Post a Comment