Sunday, December 19, 2010

சாரு நிவேதிதா வெள்ளேந்தி ; மிஷ்கின் களவானி

இங்கிருக்கிற எழுத்தாளர்களில் மிகவும் வெள்ளேந்தி யார் என்று கேட்டால்,சாரு
நிவேதிதா என்று தான் நான் பதில் சொல்வேன்.

எனக்கு அவரை நேரடியாகத் தெரியாது. அவரும் நானும் ஒரு ஹலோ கூட சொல்லிக்
கொண்டதில்லை. ஆனாலும் சாரு நிவேதிதாவை அவரின் எழுத்தின் மூலமாகவும் உரையாடல் மூலமாகவும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறேன்.

எந்த பாவமும் செய்யாத அவர் மேல் எப்போதும் ஏதாவது பழி விழுந்து கொண்டே இருக்கும். எந்த காரணமும் இல்லாமல் அவரை யாராவது துவேஷித்துக் கொண்டே இருப்பார்கள்.அவருடைய கதையின் ஒரு அட்சரம் கூட வாசிக்காமல் அவரை ஆபாச எழுத்தாளர் என்பார்கள்.இன்டெர்னெட்டைப் பயன் படுத்தி இவரைக் காட்டிலும் அதிகப் பணம் வசூலித்தவர்கள் இவரை இன்டெர்னெட் பிச்சைக்காரன் என்பார்கள். எழுத்துக்கு இவரளவு நேர்மையில்லாதவர்கள் இவரை பொதுவாகவே நேர்மையில்லாதவர் என்பார்கள். மிஷ்கின் போன்ற தகுதி இல்லாத வழிப்போக்கர்கள் எல்லாம் இவர் மீது சானம் எறிந்து விட்டுப் போவார்கள்

ஆனால் இவர்கள் சொல்கிற எதுவுமே சாரு நிவேதிதா இல்லை என்பதை அவரை கூர்ந்து கவனிக்கிறவர்கள் மட்டுமே அறிய முடியும்.

காரணமில்லாமல் இவர் மீது பழி விழக் காரணம் சாரு தேர்ந்தெடுத்துக் கொண்ட கோட்பாடு.

காமத்தைப் பேசுதல் என்பதே சாருவின் இலக்கியக் கோட்பாடாக இருக்கிறது.சமூகம் காமத்தால் சிக்குண்டு கிடக்கிறது என்று சாரு தீவிரமாக நம்புகிறார்.மனிதன் காமத்தால் அவமானப்படுகிறான். பெண்கள் காமத்தால் கொலைகாரிகளாக மாறுகிறார்கள் என்று அவர் நம்புகிறார். இந்த சிக்கலில் இருந்து மனித குலம் விடுபட வேண்டும் என்பதே சாருவின் எழுத்தில் பேச்சில் பல சமயங்களில் முக்கியமான சரடாக இருந்து வந்திருக்கிறது.

இந்தியா மாதிரியான தேசத்தில் காமத்தைப் பேசுவதற்கு ஒரு சிந்தனையாளனுக்கு எழுத்தாளனுக்கு பெரிய தைரியம் இருக்க வேண்டும். ஏனென்றால் இங்கு பிஜேபிகாரர்கள் மட்டும் கலாச்சாரக் காவலர்கள் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியினரும்,பெரியார் உருவாக்கிய திராவிட கலகத்தினருமே கலாச்சாரக் காவலர்கள் தான்.ஒவ்வொரு இந்தியனும் இங்கே கலாச்சாரக் காவலன்தான். இவர்கள் ஆதாரமாக நம்பி வாழும் காம நெறிக்கு(?) எதிரான கருத்தை சாரு பேசுகிறார் என்ற ஒன்றே, துரதிர்ஷ்டவசமாக இவர்கள் அனைவரும் சாருவுக்கு எதிரானவர்களாக அணி திரள்வதற்கு முதல் காரணமாக அமைந்து விட்டது.

மதுரையில் சாரு எழுதிய நாடகம் ஒன்று மேடையேற்றப் பட்டது. அதில் சாருவும் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.அந்த நாடகம் பாலியலை விவாதிக்கிற நாடகம். ஆனால் அந்த அரங்கில் அன்றைய தினத்தில் பார்வையாளர்களாக இடது சாரி மற்றும் அன்றைய தின சிறு பத்திரிக்கை சிந்தனையாளர்கள் என்கிற பத்தாம் பசலிகள் மேடையேறி சாரு நிவேதிதாவை தாக்கத் துவங்கினார்கள்.ஆனால் அவர்களில் பலர் இன்று அந்தக் காரியத்திற்காக வெட்கப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் காலத்தை என்ன செய்ய முடியும்? அவர்கள் உண்டாக்கிய துவேசத் தீ தொடர்ந்து எரிந்து பரவி சாருவின் பல செயல்பாடுகளை எரித்து கருக்கிக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவதாக சாருவின் ஜீரோ டிகிரி வெளி வந்த நேரம்.அந்தப் புத்தகம் பலரையும் ரத்தக் கொதிப்பிற்கு உள்ளாக்கியது. இன்று சாருவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிற ஒரு பெண் எழுத்தாளரே, ஒரு மேடையில் நான் அந்த புத்தகங்கள் மொத்தத்தையும் பணம் கொடுத்து வாங்கி தீ வைத்து கொளுத்தத் தயாராக இருக்கிறேன் என்று சூளுரைத்தார்.அந்த இலக்கிய அரங்கம் மொத்தமும் கைத்தட்டி அதை ஆமோதித்தது. ஆனால் ஜீரோ டிகிரி இன்று தமிழ் நாவல்களில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது.

இப்படி யார் யாரோ போகிற போக்கில் சாருவின் வீட்டை நோக்கி ஒரு தீக்குச்சியை கொளுத்திப் போட்டுக் கொண்டே போவார்கள். சாரு மறுபடியும் மறுபடியும் இவர்களிடம் ஏமாந்து செய்வதறியாது நிற்பார்.

சாருவுக்குப் பெரிதாக தந்திரங்கள் கிடையாது. யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதித்து உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிற கணக்கு கிடையாது.தான் கொண்டிருக்கிற கொள்கைகளோடும் கோட்பாட்டுகளோடும் இந்த வாழ்க்கையை கௌரவமாக வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்பதைத் தவிர அவருக்கு வேறு ஆசைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனாலும் கெடுக்கிற கரங்கள் அவரை நோக்கி நீண்டு கொண்டே இருக்கின்றன.

எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகத்தின் இலக்கியத்தை தலைகீழாகப் புரட்டிப் போடுகிற ஆளுமைகளாக சில பேர் இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தார்கள்.

ஒருவர் கோணங்கி.மேஜிகல் ரியலிஸம் என்கிற மந்திர குச்சியோடு வந்தார். இன்னொருவர்
எஸ். ராமகிருஷ்ணன், தமிழில் நாவல்களே இல்லை, நான் எழுதினால் தான் உண்டு என்ற கோஷத்தோடு வந்தார்.மூன்றாவது சாரு, காமத்தைப் பேசு என்கிற அரசியில் மொழியோடு வந்தார். ஜெயமோகன் இந்திய ஞான மரபை முன் வைத்து வந்தார். தலித் அரசியலை முன் வைத்து ரவிக்குமார் வந்தார்.கவித்துவ தரிசனம், புதிய அழகியல் விதி பேசிக்கொண்டு மனுஷ்யபுத்திரன் வந்தார்.

இவர்கள் ஒவ்வொருவரும் காலத்தின் அலைக்கழிப்பைத் தாங்க முடியாமல் தன்னுடைய கொள்கைகளை மூட்டைக் கட்டி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு ஏதாவது செய்து லட்சாதிபதியாகிற முயற்ச்சியில் இறங்கினார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன் வெகுஜன கலாச்சாரத்தின் நாயகனான ரஜினிகாந்தை கடவுள் என்று துதிபாடி, சிறு பத்திரிக்கை இயக்கத்தின் அடையாளங்களில் ஒருவரான குட்டி ரேவதியை கேலிப் பொருளாக்கி பலி கொடுத்து, சினிமாக்கார ர்களின் நம்பிக்கையை பெற்று, சினிமாக்காரர்களுக்கு பல விதமான வேலைகள் செய்து கொடுத்து, இன்று சிலபல பத்து லட்சங்கள் சம்பாதித்தவராக உருவாகிவிட்டார்.அவர் வந்தால் தான் எழுத முடியும் என்றிருந்த தமிழ் நாவல் இன்னும் எழுதப் படாமலே இருக்கிறது.

இவரைப் பார்த்து ஜெயமோகனும் இந்திய ஞானமரபு, அறச்சீற்றம் போன்ற வசனங்களையெல்லாம் இணையதளத்திற்கு மட்டும் என்று வைத்துக் கொண்டு திரைத்துறைக்கு வந்து சேர்ந்தார். அவருடைய கருத்தியல்களோடு உடன்பாடில்லாத திரைத்துறையில் பணியாற்றுகிற போது வேறு தெருவுக்குள் நுழைந்து விட்ட நாய் போல் வாலை இரண்டு கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு பம்மி நடக்கிறவாராக தன்னை வைத்துக்கொண்டு வசன தொழில் செய்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறவறாக மாறிக்கொண்டார்.

மனுஷ்யபுத்திரன், சுஜாதா தான் எழுத்துலகின் பீஷ்மர் என அறிவித்து சுஜாதா அவசர போக்கில் எழுதிய மாத நாவல்களுக்கெல்லாம் சிறு பத்திரிக்கையின் தரமான அச்சு மேன்மையை கொடுத்து ஒரு பதிப்பாளராக உயர்ந்து லட்சங்களைப் பார்க்கத் துவங்கி விட்டார்.

ரவிக்குமார் திருமாவளவனின் கரம் பட்டு எம் எல் ஏ, பிரமுகர் என்ற என்ற அந்தஸ்த்தை அடைந்து விட்டார்.

இப்படி ஏதாவது ஒரு சாமர்த்திய காரியம் செய்து பிழைப்பிற்கும் லட்சத்திற்கும் வழி
செய்து கொள்ளாமல் அல்லது செய்யத் தெரியாமல் நின்றவர்கள் இருவர்தான்.

ஒருவர் சாருநிவேதிதா. இன்னொருவர் கோணங்கி.

இதில் கோணங்கியின் நிலை பரவாயில்லை. அவர் எந்தப் பணமும் சம்பாதிக்காவிட்டாலும் அவருடைய குடும்ப சூழல் அவரை கை விட்டு விடாது.ஆனால் சாருவின் நிலை அப்படி இல்லை. எந்த மாதமும் வாழ்க்கை அவரை அகௌரவப் படுத்தி விடும் என்கிற சூழல். அதற்கிடையிலும் தான் கொண்ட கொள்கையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து அதே வழியில் இயங்கிக் கொண்டே இருக்கிறார்.

ஆனாலும் சாருவை விதியும் வீணர்களும் துரத்தி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சாருவின் பிரச்சினையே அவர் யாரையும் எளிதில் நம்பி மோசம் போகிறார் என்பதிலேயே இருக்கிறது.

ஒரு நண்பர் சொன்ன தகவல் இது.

ஒரு 'பிறபழ' எழுத்தாளர் இருக்கிறார். அவர் இலக்கியத்தில் போன சோரத்திற்காக, சாரு அவரை கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார். சாருவைப் பற்றித்தான் தெரியுமே. அவர் விமர்சனம் செய்ய இறங்கினால் பத்திரகாளியாகி விடுவார். அவருக்குப் பத்துக் கரங்கள் உண்டாகி விடும். சாரு அப்படித்தான் விஸ்வரூபம் கொண்டு அந்த எழுத்தாளரை விமர்சித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த விமர்சனத்தைத் தாங்க முடியாமல் அவர் வாயை எப்படி மூடுவது என்று யோசித்து, மிகத் தந்திரமாக ஒரு மேடையில் சாருவை தூக்குத் தூக்கென்று தூக்கி , புகழ் புகழ் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.அப்பாவி சாரு அந்த புகழுரைகளை அப்படியே நம்பி மறு நாளிலிருந்து அந்த எழுத்தாளரின் சம்பள மில்லாத அடியாளாக மாறி, இன்று யார் அந்த எழுத்தாளரை ஒரு வார்த்தை சொன்னாலும் பாய்ந்து சென்றுத் தாக்குகிறவராக தன்னை ஒப்புக் கொடுத்து விட்டார். சாருவின் இந்த செயல் பாட்டை, இன்றும், குறும்பு கலந்த கண் சிமிட்டலுடன் வேடிக்கைப் பார்க்கிறவராக அந்த பிறபழ எழுத்தாளர் இருக்கிறாராம்.

குணக்கேட்டை வாழ்க்கை முறையாகக் கொண்டிருக்கிற நபர்களின் எளிய நடிப்பில்
ஏமாந்து போகிற சிறு குழந்தையாகவே இன்னும் சாரு நிவேதிதா இருக்கிறார் என்பதற்கு
இதுதான் உதாரணம்.

இப்படித்தான் அவரை இன்டெர்நெட் பிச்சைக்காரன் என்று சொல்லி கேவலப்படித்திய சம்பவமும் ஒரு துவேஷமாக நிகழ்ந்தது.

சாரு இருபது வருடங்கள் தீவிரமாக எழுத்தை மட்டுமே தன் வாழ்க்கை முறையாக கொண்டு செயல்படுபவர் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர் இந்த எழுத்தினால் எதுவும் சம்பாதித்து விடவும் இல்லை என்பதும்.

அதனாலேயே அவர் பணத்திற்காக மிகக் கேவலமான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த நெருக்கடிகளின் அடிப்படையில் அவர் அவருடைய இணைய வாசகர்களிடம் சில சமயம் பணம் கேட்டு கோரிக்கை வைக்கிறார். அதில் அவருக்கு சில பல ஆயிரங்கள் வந்து சேர்ந்திருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் அவரை விட இன்டெர்னெட்டில் சில பல லட்சங்களை சம்பாதித்த அமுங்குனிச் சாமியார்கள் எல்லாம் பல பேர் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை எல்லாம் விட்டு விட்டு ஞானி சாரு நிவேதிதாவை இன்டெர்னெட் பிச்சைக்காரன் என்று பெயர் சூட்டினார். அதன் பின் ஞானி 'நான் அமெரிக்கா வரத்தயாராக இருக்கிறேன். பிரான்ஸ் வரத் தயாராக இருக்கிறேன்' என்றெல்லாம் கோரிக்கை அனுப்பி வாசகர்கள் செலவில் உல்லாசப் பயணம் போனார்.

ஆனால் அவரை இன்டெர்நெட் கொள்ளைக்காரன் என்றோ வழிப்பறி என்றோ சாரு எங்கேயும் சொல்ல வில்லை.

அது மட்டும் இல்லாமல் ஞானி ஒரு புத்தக வெளியீட்டில் சாருவை ஆதவனுக்கு சமமான எழுத்தாளர் என்று பாராட்ட இருந்தார் என்ற ஒரு தகவலிலேயே சாரு குளிர்ந்து போனார்.

இந்த பெருந்தன்மைதான் சாரு. மற்ற சிறுதன்மை தான் மற்றவர்கள்.

இது போல் சாரு குறித்து உலாவும் துவேஷங்கள் ஒவ்வொன்றிலும் வேறு உண்மை இருக்கிறது. அந்த உண்மை அறியாதவர்களே சாருவை களங்கம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.இந்த துவேஷங்கள் சாருவுக்கு வாழ்க்கை நெருக்கடியை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.

அன்புள்ள சாரு, நான் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் இரண்டு விஷயங்கள் தான்.

பணம் தான் இங்கு எல்லா விஷயத்தையும் தீர்மானிக்கிறது.ஒரு தொலைபேசி அழைப்பு உங்களை பதட்டத்திற்கு உள்ளாக்கி உடனடியாக ஆட்டோ பிடித்து ஓட வைக்கிறது. உங்களை சில பேர் இன்று அலட்சியமாக பேசி விடுவதெல்லாம் கூட உங்களின் பணமற்ற நிலையினால் தான் ஏற்பட்டு விடுகிறது.

ஏதாவது ஒன்று செய்து பணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

காட்டாற்று வெள்ளம் போன்றது உங்கள் எழுத்து. எழுத்தாளர் சுஜாதாவும் எழுத்தாளர் பாலகுமாரனும் அமர்ந்திருந்த சிம்மாசனங்கள் இன்னும் வெகுஜன பத்திரிக்கைகளில் காலியாகவே கிடக்கிறது. நீங்கள் வெகுஜன பத்திரிக்கைகளில் நாவல்கள் தொடர்கதைகள் எழுதத் துவங்கினால் அந்த சிம்மாசனம் அடுத்து உங்களுக்கே. அதன் பின் உங்களை ஏளனமாய் பேசுகிறவர்கள் எல்லாம் யானையை எதிர்கொண்ட பன்றிக் கூட்டமாக சிதறி ஓடி விடுவார்கள்.

இரண்டாவதாக இந்த மிஷ்கின் போன்ற கதைக் களவானிகளை எப்பொழுதும் உயர்வான நபர்களாகக் கருதாதீர்கள்.

இங்கே சிறந்த படங்கள் எடுக்கிற யாரும் சிறந்தவர்கள் இல்லை.

மோசமான படங்கள் எப்படி இவர்களின் அறியாமையினால் நிகழ்கிறதோ, அதைப்போலவே நல்ல படங்களும் இவர்களின் அறியாமையிலிருந்தே உருவாகிறது என்பதை தமிழ் சினிமாவைத் தொடர்ந்து கவனித்து வந்தால் ஒருவர் உணரலாம்.

உங்களை ரெமி மார்டினுக்கு அலைகிறவர் என்றும், உங்கள் எழுத்து சரோஜாதேவி எழுத்து என்றும் அபத்தமாக புரிந்து வைத்திருப்பதைப் போலத்தான் மிஷ்கின், வாழ்க்கையை இலக்கியத்தை, சினிமாவை, மனித உறவுகளை, நட்பை, காதலை, கணவன் மனைவி உறவை என, எல்லாவற்றையும் அபத்தமாகப் புரிந்து வைத்திருக்கிறார். ஆனால் தான் இந்தியாவிலேயே சிறந்த இயக்குனர் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்.

வாசிப்பு, கலை ஆளுமை இவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர் உங்களின் கால் தூசுக்குப் பெற மாட்டார்.

இவர்களின் நட்பை ஒரு போதும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்!

மிக்க அன்புடன்
யோகராஜ்

38 comments:

Anonymous said...

Yogaraj,
Neenga kooda romba vellanthi thaan.

N. Jaganathan said...

சாருவை பாராட்டுங்கள். அதற்காக மிஸ்கினைத் திட்டாதீர்கள். அவர் நல்ல கலைஞர். அவரது ஆளுமை அவரது படங்களில் மிகப் பெரிது. இலக்கியத்தை உலக சினிமாவை தமிழ் சினிமாவோடு இனைக்க முயலும் படைப்பாளி அவர். அவருக்கு முன் இதே போன்று கதை திருட்டு நடைபெரவே இல்லையா.

Gurubaran said...

Well Said Mr.Yogaraj. Wonderful Article about Charu.

Ashok D said...

சாருவை சுத்தியிருக்கும் மற்றும் அவர் நண்பர்கள்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் சில அசடுகளும் கூட வெளியே அவரை துவேஷிக்கின்றன. நேற்றுக்கூட ஒரு அசடு ஜெயமோகனையும் சாருவைவும் கம்பேர் செய்து உளறியது..

சேலம் தேவா said...

விரிவா எழுதியிருக்கீங்க..!!

Anonymous said...

வணக்கம் யோகி,

சாருவைப் பற்றிய நேர்மையான புரிதல். நான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். தொலைபேசியில் பேசியிருக்கிறேன். மிக நல்ல மனிதர். குழந்தையைப் போன்றவர்.

குமுதம் பத்திரிக்கையில் அவரைப் பற்றி அவ்ர் குடிகாரர், யாராவ்து போனால் அடித்து உதைப்பவர் கேலிச் சித்திரம் போட்டிருந்தார்கள். அதற்கு சித்திரம் வரைந்த நண்பரிடம் சாருவைப் பார்த்திருக்கிறீர்களா என்றேன்? அவர் எழுத்தைப் படித்திருக்கிறீர்களா என்றேன்? இப்படி பல கேள்விகளுக்கு ஒரே பதிலாக ‘’ இல்லை’’ என்றார்.
அப்புறம் எப்படிங்க இப்படி வரைஞ்சிருக்கீங்க என்றதற்கு. படங்கள் மட்டும் தான் நான் கருத்து வேறொருவருடையது என்றார்... அந்த வேறொருவருக்கும் சாருவைத் தெரியாது என்பது பெரிய அவலம்..

இப்படித்தான் பாவம் அண்ணன் சாரு படும் அவஸ்த்தை...

மதியழகன் சுப்பையா,
மும்பை

Anonymous said...

நானும் இதைப்போல ஒரு உலக சினிமாவை காப்பி எடுத்து படம் எடுத்தால் இந்த எழுத்தாளர்கள் என்னையும் வானளாவப் புகழ்வார்களா? இதற்கு நான் எந்த எழுத்தாளருக்கு என்ன செய்ய வேண்டும்?

..........சாருநிவேதிதாவுக்கு அவ்வப்பொழுது ஐயாயிரம் பத்தாயிரம் ஏதாவது ஒரு காட்சியில் தலை காட்ட வாய்ப்பு

surivasu said...

//மோசமான படங்கள் எப்படி இவர்களின் அறியாமையினால் நிகழ்கிறதோ, அதைப்போலவே நல்ல படங்களும் இவர்களின் அறியாமையிலிருந்தே உருவாகிறது // Nice Article Yogaraj sir. The way you have written this article excellently. Keep follow you :-)

Anonymous said...

Fantastic Yogaraj!!!

This is exceptional perception.

Anonymous said...

I really,really appriciate your wrinting. What you said is 100% true.

Anonymous said...

wonderful research abt charu... whatever u have written is very true. he's a innocent guy. i'm close to him. i know abt him.

Anonymous said...

I have been reading charu for the past 10 years. In fact, reading charu's work is like having sex. We feel ecstatic, and dirty and sweaty and guilty at the same time:) I love aadhavan, and i see glimpses of the his inner demon in Charu.
I strongly believe writers should have their own publicists, who can take up the burden of spreading awareness about the writer's work, so the writer can concentrate on his work. I strongly beleive personal websites/blogs takes the focus away from their work and instead puts the spotlight on their personality.
I like charu's work when he is a writer. When he becomes this infamous rockstar, I dont like his writing becos it looks a little bit artificial, and away from his true inner demons which makes him write the stuff as real and as beautiful as it could be.

heartsnatcher said...

ore comedy boss ungaloda..enjoyed well ..carry on

Anonymous said...

In your previous article you wrote charu wants 5000 or 10000 , so he compromised with directors

Now in this article you are saying

இப்படி ஏதாவது ஒரு சாமர்த்திய காரியம் செய்து பிழைப்பிற்கும் லட்சத்திற்கும் வழி
செய்து கொள்ளாமல் அல்லது செய்யத் தெரியாமல் நின்றவர்கள் இருவர்தான்.

ஒருவர் சாருநிவேதிதா. இன்னொருவர் கோணங்கி.

வித்யாஷ‌ங்கர் said...

good analise situvation observation is correct- durai@vidyashankar

மர்ம வீரன் said...

//.ஆனால் சாருவின் நிலை அப்படி இல்லை. எந்த மாதமும் வாழ்க்கை அவரை அகௌரவப் படுத்தி விடும் என்கிற சூழல். //

அட அவரு 40,000 ரூபாய்க்கு கூலிங் கிளாஸ் வாங்குறதா எழுதி இருக்காரு. நீங்க என்னடான்னா...

gnani said...

சாருவுக்கு இண்ட்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பெயரை நான் சுட்டவில்லை. அது ஏற்கனவே பல பிளாகர்கள் வலைபூக்களில் பயன்படுத்திக் கொண்டிருந்த சொற்றொடர். அதை நான் மேற்கோள் காட்டி எழுதினேன். நான் எந்த நாட்டுக்கும் உல்லாசப் பயணம் போகவில்லை. அமெரிக்காவுக்கு வரும்படி நண்பர் அருள் மூன்று வருடங்களாக அழைத்துக் கொண்டிருந்தார். சென்றேன். அங்கே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கு யாரேனும் அழைத்தால் மட்டுமே செல்ல இயலும் என்று கூறி அதன்படி ரயில், பஸ், விமான டிக்கட் வாங்கிக் கொடுத்தால் சென்றேன். அதனால் பொதுவாக் மூன்று மாதம் ஒருவர் இருக்கக்கூடிய அமெரிக்காவில் நான் இருபது நாட்கள்தான் இருந்தேன். பிரான்சுக்கு அழைப்பு ஏற்கனவே இருந்தது. லண்டனைலிருந்தும் இருந்தது. இவற்றையெல்லாம் ஒன்றாக இனைத்தால் நண்பர்களுக்கு செலவை மிச்சப்படுத்தலாம் என்பதால் அறிவிப்பு வெளியிட்டேன். அவ்வளவுதான். நான் ஒருபோதும் பிச்சை எடுத்ததில்லை. என்னை ஜெயலலிதாவிடமிருந்து பெட்டி வாங்கினேன் என்று சாரு அபாண்டமாக எழுதியது உங்களுக்கு தவறாகப் படவில்லையா ? அதற்காக அவ்ரே என்னிடம் அவுட்லுக் வாசகர் சந்திப்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டதை இங்கே பதிவு செய்கிறேன். நன்றி.

ஞாநி

Look4Reality said...

சாரு உங்களை தனியாக email அனுப்ப கோரியுள்ளார்.
விபரம் அவரது blog படியுங்கள்.

R. Gopi said...

கட்டுரை முழுதும் படித்தேன். இது போக உங்களுடைய மற்ற பதிவுகளையும் படித்தேன். இப்போதைக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இன்னொரு நாள் திரும்ப வருகிறேன்.

நிறைய மாற்றுக் கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள். நன்றி.

அன்புடன்

கோபி

Anonymous said...

He critices all kinda people for getting publicity....He has never left not even a single person in Tamil Nadu.Why didnt u say anything about profanity in his articles?Can any one tamil woman read his blog articles??? That pshyc used to scold the people in his articles who are critising his books!!!!!

செங்கதிரோன் said...

wonderful review about Charu..keep t up

Senthil said...

Great!!!!!!!!!!!

Kris said...

Its unfortunate to compare Charu and Gnani. Gnani lives a simple life as much as he can. He doesn't wear costly dress, Doesn't go for Hi-fi Bar etc, Its very bad to say that Charu is simple, he wants to Live like a rich man compromising on his Rules.No one can believe that he did not get any credit on advertising Nithi. He wants money so he makes advertisements and cheap publicity on his site etc. He is a short tempered man. He cant even think and react to any issue. He is Proud of having costly things etc.

Anonymous said...

நல்ல அலசல்.
சாருவின் இந்த நிலைமைக்கு காரணம் சாரு பல விஷயங்களில் தன்னிலே முரண் படுவதுதான்.
பல சமயங்களில் தனக்கு ஒரு கோட்பாடும் பிறருக்கு மற்றொன்றும் என வாதிடுபவராகவும் இருக்கிறார்.
(முக்கியமாக காட்டமான விமரிசங்களில்).
சாருவின் எண்ணவோட்டங்கள் நிலையில்லாத மேகக் கூட்டங்களின் மாயா ஜாலங்கள் போன்றது.
கவர்ச்சிகரமானது ஆனால் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியாது. ரசனையில் அது ஒரு தனி வகை.
ஈடு இணையில்லாத ஒரு சரளமான எழுத்து கைவரப் பெற்றவர். இந்த விஷயத்தில் சுஜாதாவைக் கூட
பல படிகள் தாண்டியவர். ஆனால் புத்திசாலித்தனம் இல்லாததால் கஷ்டப்படுகிறார்.

Thamil said...

What you have written is all true.

Unknown said...

Well said.. Excellent composition... Chanceless..
//மோசமான படங்கள் எப்படி இவர்களின் அறியாமையினால் நிகழ்கிறதோ, அதைப்போலவே நல்ல படங்களும் இவர்களின் அறியாமையிலிருந்தே உருவாகிறது என்பதை தமிழ் சினிமாவைத் தொடர்ந்து கவனித்து வந்தால் ஒருவர் உணரலாம்.// Super lines.. Keep it up ..

Selva said...

தன்னை புகழந்தவுடன் அவர்களுக்கு பரிந்து பேசுவது, அடியாளாக மாறுவது எப்படி ஏமாளிதனம் ஆகும்? அவர் சுயநலவாதி என்று தானே அர்த்தம் ஆகும்? நான் சாருவுடன் பழகியது இல்லை...உங்களை போல் தான் அவர் எழுத்துகளை படித்து அவரை புரிந்து கொள்ள பார்க்கின்றேன். என்னை பொறுத்தவரை அவருக்கு பிடித்தவரை புகழ்வதும் பிடிக்காதவரை கரித்து கொட்டுவதும் தான் அவர் பழக்கம். என்ன தான் இலக்கியவாதியாக இருந்தாலும் கனிமொழியை அவள் ஒரு ஊழல் பேர்வழி என்று தெரிந்தும் தனது கூட்டத்துக்கு அழைத்தாரோ அன்றே அவர் வெள்ளேந்தி கிடையாது என்பதை புரிந்துகொண்டேன்.

Anonymous said...

Can you please explain about Zero Degree.. Everybody (people like you) saysing Aaha Ooho.. What Charu is telling in Zero Degree.. I have zero degree and could not read more than 2 chapter... summa ellam kathai vuduranga... is this great novel ?

Anonymous said...

Charu's (and his fans) a***e willed be chilled if he(they) reads this blog!!!! This blog portrays that Charu is as innocent as a 18 month baby, which may be not.

I would say, it is true that Charu is quite innocent - as he (or used to) believe in swamiyars when can and writes something worldclass - but not that much.

PB Raj said...

எப்போடியோ சாருவை பற்றி எழுதி பிரபலம் ஆகிவிட்டிர்கள்...ஆனால் உங்கள் எழுத்தில் உண்மை உள்ளது...வாழ்த்துகள்..

தவநெறிச்செல்வன் said...

தங்கள் கருத்தில் பல இடங்களில் எனக்கு உடன்பாடு உண்டு, மிக நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்,

//
ஒருவர் கோணங்கி.மேஜிகல் ரியலிஸம் என்கிற மந்திர குச்சியோடு வந்தார். இன்னொருவர்
எஸ். ராமகிருஷ்ணன், தமிழில் நாவல்களே இல்லை, நான் எழுதினால் தான் உண்டு என்ற கோஷத்தோடு வந்தார்.மூன்றாவது சாரு, காமத்தைப் பேசு என்கிற அரசியில் மொழியோடு வந்தார். ஜெயமோகன் இந்திய ஞான மரபை முன் வைத்து வந்தார். தலித் அரசியலை முன் வைத்து ரவிக்குமார் வந்தார்.கவித்துவ தரிசனம், புதிய அழகியல் விதி பேசிக்கொண்டு மனுஷ்யபுத்திரன் வந்தார்.//

ஒரு புதிய எழுத்தாள சமூகத்தினரைப்பற்றி இப்படி சுருக்கமாக அழகாக எழுதமுடியும் என்று நினைத்தபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது. சம்பவங்கள், சுவை என இரண்டு சேர்ந்து மிக நன்றாக இருந்தது, ஆனால் சாரு தளத்தில் தொடர்பு கொடுக்கப்பட்டும் கூட யாரும் கருத்து தெரிவிக்கவில்லையே ஏன், அல்லதுதாங்கள் அவைகளை வெளியிடவில்லையா?

தமிழ்நதி said...

வாசித்தேன் என்பதைச் சொல்ல இந்தப் பின்னுாட்டம். சில விடயங்களில் கருத்துச் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. காரணம் உங்களுக்கே தெரியும். ஆனால், பிழைக்கத் தெரியாதவர்கள், பணம் இல்லாதவர்களுக்கு மதிப்பும் இல்லை என்ற கருத்தோடு உடன்படுகிறேன்.

சரவணன் said...

கட்டுரை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

Anonymous said...

Hai Yoga,
Wow, excellent analysis of Charu!
Please don't advise him to be worldly wise. If he becomes so, we will lose a genuine artist of our time. His innocence and spontaneity are his strength! Hats off Charu!
Never compromise yourself to get lakhs! Kanimozhi's deterioration affects me a lot!
I never expect such things can happen with you, Charu!
Well done Yoga!
Keep on blogging in the same way!

புதிய ஆதவன் said...

சாருவை வெகுஜன ஊடகத்தில் எழுத சொல்வது சரியா?
அவரை சுஜாதா , பாலகுமாரன் போன்றவர்கள் அமர்ந்த சிம்மாசனத்தில்
அமர சொல்வது சாருவை அவமான படுத்துவதாக
உள்ளது.

to ஞானி
சார் , நீங்கள் கருணாநிதியை விமர்சிக்கும் பொழுது ஜெயலலிதாவை
விட்டு விடுகிறீர்கள். நீங்கள் நடுநிலையாளர் என்றால் கருணாநிதியை
திட்டும் பொழுது ஜெயலலிதாவையும் ஓரிரு வரியில் விமர்சிக்க வேண்டும்.
இல்லையென்றால் நீங்கள் பெட்டி வாங்கியதாகவே கருதப்படுவீர்கள்.

ஆனால் சாரு அவ்வாறு இல்லை அவர் மேற்கண்ட இருவரில் யாரையாவது
சாடும் போது மற்றவரையும் சாட தவறுவதில்லை. அங்குதான் உங்களுக்கும்
சாருவுக்கும் வேற்றுமை உள்ளது.

Victor Suresh said...

யோகராஜா, உங்களது பதிவு சாரு நிவேதிதாவின் எழுத்தின் பெரு வெற்றிக்கு ஒரு தக்க சான்று. உங்களைப் போன்ற சிந்தனையாளர் ஒருவரை, தான் தன்னைப் பற்றி ஏற்படுத்த விரும்பும் பிம்பத்தை எவ்வளவு எளிதாக ஏற்கச் செய்து விட்டார் அவர் என்று நினைக்கும் போது, ஏனோ அ. முத்துலிங்கத்தை எந்திரன் படத்தின் முதல் காட்சிக்கு செலுத்திய சன் மார்க்கெட்டிங் தந்திரம்தான் நினைவுக்கு வருகிறது. பின்னது “பேராசையின் ஆபாசக் கனவு” என்றால் முன்னது “சுயதம்பட்டத்தின் மாபெரும் வெற்றி” எனலாம். சாரு நிவேதிதா பொது வெளியில் வைக்கும் சிந்தனைகள், படைப்புகள், அவர் செயல்களை அவர் விரும்புவதற்கு மாறாக விமர்சிப்பது துவேஷம் என்பது அவர் கருத்து. அதற்கு அவரது தீர்வுகள்: வசை, அவதூறு, சிறுமைப்படுத்துதல் போன்றன. இப்படிப்பட்ட ஒருவரை வெள்ளந்தி என்று அழைத்து, அந்த வார்த்தைக்கான பொருளில் மாசு கலந்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

Anonymous said...

சாரு நிவேதிதா 10-15 வருடங்களுக்கு முன்பு காமத்தைப் பற்றி, காம 'விழிப்பை'ப் பற்றி பேசுவதற்கு கஷ்டப்பட்டிருக்கிறார். அது அப்போதைய சூழல். இப்போது அவருக்கு கற்றுக் கொடுப்பார்கள் இன்றைய தலைமுறை. எப்படி இது சாத்தியமானது ? சாருவின் தீவிர எழுத்தினாலா ? இல்லை. சமூகம் போய்க்கொண்டிருப்பதே அந்தத் திசையில் தானே.

பப் கலாச்சாரமும், கார்ப்பரேட் கலாச்சாரமும், நுகர்வு வாழ்க்கை கலாச்சாரமும் தான் உலகளாவியத்தின் மந்திரம். அந்த மந்திரத்தின் ஒரு பகுதி தான் சாரு போராடிய, போராடுகிற கட்டுண்டிருக்கும் காமத்திலிருந்து விடுதலை என்கிற 'விடுதலைப் போர்'. அதற்கு இப்போது அவருக்குத் துணையாக உலகளாவியமே நிற்கிறது. நம்பிக்கை இல்லையென்றால் இங்கு 10வது படிக்கும் ஏதாவது ஆங்கிலப் பள்ளி மாணவனின், மாணவியின் செல்போனை வாங்கிப் பார்க்கவும்.

ஆனாலும் நீங்கள் சொல்வது போல் அவர் பிழைக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். இப்போதும் அவர் அப்படித்தான் என்று நீங்கள் சொல்வது உண்மையா? ஏனென்றால் ஞானி, ராமகிருஷ்ணன், ஜெயமோகன் வரிசையில் குமுதம், ஆனந்த விகடனில் பேசப்படும் அளவு பிரபலமடைந்திருப்பவர் வரிசையில் தற்போது இருப்பவர் சாருவே.

நமது கலாச்சாரத்தை அவ்வளவு எள்ளி நகையாடும் அளவிற்கு காமம் நமது கலாச்சாரத்தில் அமுக்கப்படவில்லை என்கிற உண்மை உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன். கலாச்சாரக் காவலனாக பிஜேபிகாரனையும், பாமகவையும் வர விட்டிருப்பது நமது தவறில்லையா ? கம்யூனிஸ்ட்டுகள் கலாச்சாரக் காவலராக பெரிய அளவிற்கு மார்தட்டி நிற்பதில்லை. ஏனென்றால் அவர்களின் போராட்டம் 'வெகுஜனப் போராட்டம்' அளவில் மட்டுமே. சாருவின் காம விடுதலை எழுத்துக்களை எழுத்தில் எதிர்கொள்ள இங்கு யாரும் இல்லை என்பது துரதிருஷ்டமே. இங்கு கலாச்சாரக் காவலர்களாக செயல்படுபவர்களும் 'அடிதடிக்' காவலர்களாக மட்டுமே தென்படுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சாரு போன்றவர்கள் புளகாங்கிதம் அடைந்து பேசும் பிரெஞ்சுக்காரர் போன்ற நாட்டவர்கள் தங்களது கலாச்சாரத்தின் மேல் அவ்வளவு பிடிப்பு உள்ளவர்கள் என்பது தான். தனது வேர்களை உணராதவன், மதிக்காதவன், மறப்பவன் பின் எதையும் மதிப்பான் என்று தோன்றவில்லை.

Anonymous said...

I have been reading Gnani's writings for almost 2 years or so... mainly the articles in Kumudam, Kalki and his personal website Gnani.net.in

I think the comparison between Gnani and Charu Niveditha is very much like comparing Periyar and Dr. Prakash (Famous Sex Doctor).

I have nothing against Charu Niveditha and actually have read his blogs and through that link - landed up here. I can see a lot of extreme emotions, vengence, violence and adultery in his writings and thinking process.

Esp. when he justifies on his writing against Mysskin as if its like some one having intercourse with his 6 year old daughter. I really don't think any sane human being would compare like this.

GNANI is at an entirely different league... I am surprised and angry at Gnani for wasting his valuable time to come here and provide comments. Gnani is brave, courageous, truth seeker and a very simple uncompromising man. He is truly an inspiration to several youngsters.

As I said earlier, Charu is a normal writer who earns bread and butter through selling his writings. And he knows the knack of writing things that capture certain audience. And I think what Mysskin did was entirely wrong and uncalled for.

Mysskin is definitely a garbage... he will be thrown out of this cine field in no time. He has a BIG mouth and no brain or heart.... always complains every one. I am surprised why Charu is getting influenced by such loser and start acting like a cry baby.

Thanks for reading....

Renuka Kumar
Bangalore

Post a Comment