Sunday, September 27, 2009

ஆதவன் தீட்சன்யா என்னும் ஆள்காட்டி

தனி ஈழத்தை ராஜபக்ஷேயிடம் இருந்து வாங்கினாலும் வாங்க முடியும் , ஆனால் ஆதவன் தீட்சன்யாவிடம் இருந்து வாங்க முடியாது போலிருக்கிறது.

மே 17 –ல் ஈழப்போராட்டம் ஒரு நெருக்கடியை சந்தித்த நாளில் இருந்து அவருடைய ஆட்டமும் பாட்டமும் ஆனந்தத் தாண்டவமும் சகித்துக் கொள்ள முடியாத படி இருக்கிறது.

தான் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள் பார்பன கட்டமைப்பை மகிழ்ச்சி செய்யும் விதத்தில் ஈழப்போராட்டத்திற்கு எதிராக பேசியும் எழுதியும் வருகிறார்.

சமீபமாக அவர் சிறப்பு ஆசிரியராக செயல் படும் புதுவிசையில்
இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் இஸ்லாமியப் பேராசிரியர் சிராஜ் மசூர் அவர்களின் – நேர்காணலைப் பிரசுரித்திருக்கிறார்.

இன்று ஈழம் குறித்து கேட்க ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.

அங்கு சிங்களப் பேரினவாதம் தன்னுடைய பேயாட்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திறந்த வெளி கொட்ட்டிகளில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

தினசரி நூற்றுக்கணக்கில்இளைஞர்கள் கண்களை கட்டி அழைத்துச் செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.

மனித உரிமையும் மனிதாபிமானமும் இதுவரை உலகம் சந்தித்திராத வகையில் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.

தமிழர்கள் வாழும் பகுதிகள் என்று மட்டுமில்லாமல் சிங்களர்களும் வாழும் பகுதிகளிலும் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கிறது.

இவைகள் எவைகள் பற்றியும் கேள்வி கேட்காமல், என்னென்ன கேள்விகளைக் கேட்டால் விடுதலைப் புலிகள் இய்க்கத்தின் மீதான கசப்புணர்வை உண்டாக்கும் பதில்கள் வருமோ அது போன்ற கேள்விகளாக கவனமாக கேட்டிருக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யப் படுகிற விதமாக நான் மேற் சொல்லும் விஷயங்கள் குறித்து ஒரு கேள்வியும் இல்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஒருவருக்கு அல்லது ஒரு கட்சிக்கு விமர்சனம் இருப்பது தவறில்லை.

இன்று அங்கே நெருக்கடிக்குள்ளாகி இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமல்ல.விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் அதனை வெறுமனே கொண்டாடுவதற்கு.

சில லட்சம் தமிழர்கள் இறந்து போயிருக்கிறார்கள். மிகவும் அநீதியான போர்க்குற்றங்கள் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு இனம் மிகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

ஈழமே ஒரு பெரிய இழவு வீடு போல் இருக்கிறது.

இத்தனை பெரிய துயர சமயத்தையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது வெறுப்புணர்வை வளர்க்கும் விதமாக பயன்படுத்திக்கொள்வதற்கு ஒருவருக்கு அல்லது ஒரு கட்சிக்கு மிகவும் குரூரமான மனம் இருக்க வேண்டும்.

இந்த புதியவிசை பத்திரிக்கைக்கு மனிதாபிமானத்தை பிதுக்கிப் பிதுக்கி கதை எழுதும் காமராஜ், ஷாஜகான் போன்றோர் ஆசிரியர் குழுவினர் வேறு.

அந்தப் பத்திரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வையில் இயங்கும் பத்திரிக்கை என்றே அறிகிறேன். அவர்களின் இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உருவாகும் பத்திரிக்கை என்றும் அறிகிறேன்.

அந்த நேர்காணலை, அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளை , ஈழ விசயத்தில் கட்டற்று செயல்படும் ஆதவன் தீட்சன்யாவின் செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனசாட்சியாகவே நான் பார்க்கிறேன்.

வரலாற்றில் கருணா,அப்துல் கலாம் , ஆதவன் தீட்சன்யா போன்றோருக்கு எப்போதுமே ஒரு தனி இடம் இருக்கிறது.

இவர்கள் தன்னுடைய இனத்தை அழிப்பவர்கள், வேறருப்பவர்கள், தன்னுடைய இனத்திற்கு எதிரானவர்கள் இவர்களோடு மிகுந்த உவப்புடன் கை கோர்த்துக் கொள்வார்கள். அதன் மூலம் தனக்கு கிடைக்கும் அங்கீகாரங்களை ஆனந்தமாக பெற்றுக்கொள்வார்கள். தன் இனத்திற்கு எதிரான செயல்பாடுகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். தன் இனத்திற்கு எதிரான செயல்பாடுகள் குறித்து மிகுந்த மௌனம் காப்பார்கள். இது அவர்களுக்கு அந்தஸ்த்துள்ள வாழ்க்கையை உண்டாக்கிக் கொடுக்கும்.

ஆதவன் தீட்சன்யாவிற்கும் அவருடைய இந்த நிலைப்பாடு நல்ல ஸ்தானத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. கட்சி விரும்பும் பணியை சிறப்புடன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பண்ணையார்கள் வீட்டில் நிறைய வேட்டை நாய் வளர்ப்பார்கள். பண்ணை அடிமைகள் ஏதாவது கலகம் செய்தால் அந்த வேட்டை நாயை அவர்கள் மீது ஏவுவார்கள். அந்த வேட்டைநாயும் தனக்கே உரிய மிருக குணம் காரணமாகவும் விசுவாசத்தின் காரணமாகவும் பண்ணை அடிமைகளை விரட்டி விரட்டி கடிக்கும். ஆதவன் தீட்சன்யாவும் அப்படி ஒரு விசுவாசமான வேட்டை நாயகச் செயல்படுகிறார். அவர் கண்களிலும் பற்களிலும் ஒரு மிருகத்திற்கான குரோதம் இருக்கிறது.இத்தனைக்கும் அவருக்கு யாரும் கட்டளையிடவில்லை. வெறுமனே அவிழ்த்து மட்டுமே விட்டிருக்கிறார்கள். அதிலிருந்தே குறிப்பறிந்து செயல் படுகிறார்.


உலக வரலாற்றில் எனக்குப் புரியாத ஒரு விஷயம் இந்தியாவில் இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும் ஈழப்போராட்டத்தின் மீதும் இருக்கிற பகை உணர்வு தான்.

முப்பத்தியேழு ஆண்டுகள் அங்கே ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது . அது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் இருந்து ஒரு அறிக்கை வந்தது இல்லை நண்பர்களே.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்காக இவர்கள் ஒரு பிடி அரிசி சேகரித்து தந்த தில்லை நண்பர்களே.

மே’17க்கு முன்பாக போர் உச்சக்கட்டத்தை அடைந்து தினசரி சில ஆயிரம் தமிழர்கள் இறந்து போய் கொண்டிருந்தார்கள் அந்த இறப்பு குறித்து அவர்களின் எந்த சஞ்சிகைகளிலும் ஒரு செய்தி இருந்ததில்லை நண்பர்களே.

மொத்த த்தில் அவர்கள் தமிழ் அரசியலுக்கு எதிராக யோசிக்கிற செயல்படுகிற சில லட்சம் மூளைகளை தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய பகை இவர்களுக்கு ஏன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 37 ஆண்டுகளாக வீரம் சொறிந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே சிபிஎம் தோழர்கள் பணம் வசூலித்து அதை மாத சம்பளமாக பிரித்துக் கொண்டு ஒரு சுகபோக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கேள்வியாக தமது தோழர்களிடையே எழுந்து விடக்கூடாது என்று நினைத்து இப்படி ஒரு துவேஷத்தை அவர்கள் மீது பரப்பி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

அல்லது ஹிந்து என்.ராம்தான் இவர்களின் ஞானகுருவாக அரசியல் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.அவருடைய வழிகாட்டுதலால் இவ்வாறு செயல்படுகிறார்களா என்றும் தெரியவில்லை.

அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராமன மலையாள பெரும்பான்மைத் தலைமை காரணமா என்று யோசிக்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஈழப்போராட்டம் குறித்துப் பேசாமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது. அதனுடைய கள்ள மௌனம் சில ரகசிய சமிஞ்கைகளை உண்டாக்க தமிழகத்தின் சிபிஎம் தோழர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக தான்தோன்றித் தனமாகவும் தற்குறித்தனமாகவும் எழுதவும் பேசவும் துவங்கி விட்டார்கள்.

ஆதவன் தீட்சன்யா போன்ற சில்லரைகள் அல்லாமல் சிபிஎம்மின் தமிழ் மாநிலக் குழுவின் யாரோ ஒருவரோ அல்லது சிபிஎம்மின் அறிவின் ஊற்றுக்கண் என்று சொல்லப்படுகிற பொலிட்பீரோவின் யாரோ ஒருவரோ ஈழம் குறித்து வெளிப்படையான விவாத த்திற்குத் வருவார்களே யானால் அவர்களின் விவாத த்தை எதிர்கொள்ளலாம். ஆனால் சிபிஎம் ஒரு போதும் அதை செய்வதில்லை. அப்படிச் செய்தால் சிபிஎம் கடந்து ஐம்பது ஆண்டுகளாக உள்ளே சேகரித்து வைத்திருக்கிற தமிழ் குரோத அரசியல் வெளிப்பட்டு விடும். கட்சியில் மீதமும் இருக்கிற தமிழ் உணர்வாளர்களை அது இழக்க நேரிடம்.

அதனால் தான் கட்சி மௌனமாக இருந்து விட்டு ஆதவன் தீட்சன்யா போன்ற சில்லரை அரசியல் வாசிப்பாளர்களை அது ஏவி விடுகிறது.

ஆதவன் தீட்சன்யாவும் பாய்ந்து பாய்ந்து குரைத்து தன் விசுவாசத்தைக் காட்டுகிறார்.

நாளை ஆதவன் தீட்சன்யாவின் காதில் கட்சி முனுமுனுத்தால் அவர் திருமாவளவன் கிருஸ்ணசாமி போன்ற தலித் இயக்கத் தலைவர்களை கத்தியால் குத்தி விட்டு வந்து நின்றாலும் நிற்பார்.

ஆதவன் தீட்சன்யாவிற்கான நல்ல எஜமான் சிபிஎம். சிபிஎம்மிற்கான நல்ல வேட்டை நாய் ஆதவன் தீட்சன்யா.

Made for each other.

2 comments:

ச.தமிழ்ச்செல்வன் said...

ஆதவன் தீட்சண்யா பற்றிய இக்கட்டுரை அவதூறுகளின் உச்சகட்டமாக உள்ளது தோழரே.ஒரு வரிகூட சரியில்லை.தப்பான தகவல்களுடன் தப்பான பார்வையுடன் வந்துள்ள பதிவு இது. மார்க்சிஸ்ட் கட்சியை நாலு வார்த்தை திட்டினால்தான் ஒரு அறிவாளியாக ஏற்றுக்கொள்வார்கள் ஈழ ஆதரவாளராக ஏற்றுக்கொள்வார்கள்.அதுக்காக எழுதிய கட்டுரை இது.வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி.

ஜெரி ஈசானந்தா. said...

யோகராஜ் பாபு அவர்களே வணக்கம். தமிழ் இன உணர்வாளர்கள் மனதினை வரிக்கு வரி பிரதிபலித்து உள்ளீர்கள். வாழ்த்துகள் . தொகுதிக்கு மூனே முக்கா ஒட்டு வச்சிருக்கிற மர்க்ஸ்சிச்டுகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. உலகின் முதன்மையான தமிழ் தேசிய இனத்தை, "தலித்தியம், தமிழ் இஸ்லாமியம்.".என உடைத்தது தான் தமிழ்நாட்டு மார்க்ஸ்சிச்டுகளின் இனமான பணி.தமிழ் தேசியத்தின் முதல் எதிரி "சிங்களவர்கள் அல்ல,
மார்க்சிஸ்டுகளே." தொடர்வோம்.

Post a Comment